செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினிக்கும் , சிரஞ்சீவிக்கும் மொத்தமா குழிதோண்டிய கீர்த்தி சுரேஷ் , தலையில் துண்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது தமிழில், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக ஹிந்தியிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கி, நடிகர் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான தெறி படத்தின் ஹிந்தி ரிமேக்கில் தான் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். இதனிடையே இவரது நடிப்பில் இந்தாண்டு மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவிக்கு நாமம் போட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: உங்களுக்கு ராசியே இல்ல என ஒதுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்.. வேதனையுடன் அவரே சொன்ன விஷயம்

அண்மையில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியான போலா ஷங்கர் படத்தில், கீர்த்தி சுரேஷ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி தெலுங்கில் வெளியான இப்படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்காகும். தங்கைக்காக எதுவேண்டுமானாலும் செய்ய துணிந்த அண்ணனாக நடித்த அஜித்தின் கதாபாத்திரம் இப்படத்தில் பெருமளவு வரவேற்கப்பட்டது.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்திருந்த நிலையில், இப்படம் படுதோல்வியடைந்து போட்ட காசை கூட எடுக்கமுடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸான நிலையில், போலா ஷங்கர் படத்தை காட்டிலும் ஜெயிலர் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சிரஞ்சீவி இப்படத்தின் மூலமாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்.

Also Read: அப்பா வயது நடிகரிடம் மேடையில் அநாகரிகமாக கட்டிப்பிடித்த கீர்த்தி சுரேஷ்.. வாய்ப்பு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களா!

ஆனால் இந்த தோல்விக்கு எல்லாம் காரணம் கீர்த்தி சுரேஷை தங்கையாக நடிக்க வைத்தது தான் என தெலுங்கு வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷ் எத்தனையோ படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார், இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான மகாநதி படத்தில் சாவித்ரியாக நடித்து தேசிய விருதையே வாங்கினார். ஆனால் கீர்த்தி சுரேஷ் தங்கையாக யாருடன் நடித்தாலும் இவரால் அந்த படம் ஓடுவதில்லை என பேசப்பட்டு வருகிறார்.

முதலில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாக நடித்த நிலையில், இப்படம் பெருந்தோல்வியடைந்தது. தற்போது அதேபோலவே தெலுங்கு சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்த போலா ஷங்கர் படமும் படுதோல்வியடைந்தது. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷுக்கு தங்கை கதாபாத்திரம் ராசி இல்லை என்ற பேச்சு நிலவி வருகிறது.

Also Read:  மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

Trending News