புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அட்லீயை பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.. படமே ஓடல, இதுல இது வேறயா என ஓட்டம் பிடிக்கும் முதலாளி

Actress Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் வெற்றி படத்தை கொடுத்து பல வருடம் ஆகிறது, ஆனால் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். தன்னை பற்றி ஏதோ ஒரு கிசுகிசுவை வர செய்கிறார். இதனால் இவரை பற்றி ரசிகர்களும் பேசி வருகிறார்கள்.

 உடலை இளைத்து ஸ்லிம் ஆகிறேன் என்ற பெயரில் பார்க்க முடியாதபடி மோசமான பொலிவுடன்,  முகத்தில் கலையே இல்லை என மோசமாக அவரை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்திலும் அவரை சுத்தமாகவே பார்க்க முடியவில்லை.

Also Read: நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் இறங்கும் ஹீரோயின்.. பெட்டிகளை இறக்கி அட்லீ எடுத்த புது அவதாரம்

கதாநாயகிக்குரிய எந்த அம்சமும் கீர்த்தி சுரேஷுக்கு இல்லாமல் போய்விட்டது. இதனால் அடுத்ததாக அட்லீயை வைத்து பிளான் போட்டு இருக்கிறார். அட்லீயை தன் வலையில் வீழ்த்தி அவர் மூலம் ஹிந்தியில் கால் பதிக்க போகிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி  படம் ஹிந்தியில் தயாராக போகிறது. தெறி படத்தின் ஹிந்தி  ரீமேக்கை தனது சொந்த தயாரிப்பில் அட்லீ தயாரிக்கப் போகிறார். தெறி படத்தில் விஜய் நடித்த கேரக்டரில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவையும், சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டுள்ளார்.

Also Read: அட்லீக்கே டஃப் கொடுக்கும் மாவீரன் இயக்குனர்.. இத்தனை படத்தில் இருந்து காப்பியா

கீர்த்தி சுரேஷுக்கு படமே ஓடல, மூஞ்சியும் பார்க்கிற மாதிரி இல்லை. இந்த லட்சணத்துல பாலிவுட் படத்தில் மட்டும் நடித்து என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை. இதற்கு அப்புறமும் கீர்த்தி சுரேஷ் இந்த முகத்துடன் வந்தால் எந்த படமும் ஓடாது என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால் இவருடைய சம்பளத்தை மட்டும் 2 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்தி உள்ளார். இதை யார் கொடுக்கப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. இவரைப் பார்த்தாலே இப்போது சினிமா தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.

Also Read: முழுசாய் சொதப்பிய அட்லீ.. ஜெராக்ஸ் போல் அப்படியே ஷாருக்கானை வைத்து விளையாடிய சின்ன தம்பி

Trending News