திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த கீர்த்தி சுரேஷ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்மா

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தாலும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திறமையால் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் பல சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுவிட்டு அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அண்ணாத்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் கேரியர் மொத்தமாக மாறிவிட்டது. பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு தற்போது பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொண்டு இருக்கிறது. அதாவது சமீபத்தில் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்யப் போவதாகவும், அதற்குக் காரணம் கீர்த்தி சுரேஷ் என்ற ஒரு தகவல் பரவி வந்தது.

Also Read : முதல்முறையாக ஸ்விம் சூட் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. மாலத்தீவை சூடாக்கிய டிரிப்

இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் ரிசார்ட் உரிமையாளரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் பள்ளி முதலே காதலித்து வருவதாகவும், கிட்டத்தட்ட 13 வருடங்களாக இவர்களது உறவு தொடர்ந்து வருவதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிப்பார் என்று செய்தி வெளியானது.

இப்போது இந்த செய்தியும் வதந்தியே என்பதை கீர்த்தி சுரேஷின் தாயாரும், நடிகையுமான மேனகா கூறி உள்ளார். அதாவது கீர்த்தி சுரேஷை பற்றி இணையத்தில் பரவி வரும் செய்தி பொய்யானது. வேண்டுமென்றே இவ்வாறு புரளியை கிளப்பி விட்டு உள்ளார்கள். அந்த செய்தியை பார்க்க கூட எங்களுக்கு விருப்பமில்லை.

Also Read : கிசு கிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்.. விஜய்க்கு கொடுத்த மிகப்பெரிய ஷாக்

கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்தியை சுவாரசியமாக்குவதற்காக சிலர் இதுபோன்ற வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். ஆகையால் இதைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்பது போல கீர்த்தி சுரேஷ் சார்பாக அவரது அம்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆகையால் கீர்த்தி சுரேஷ் தற்போது சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாராம். தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும்போது அவரைப் பற்றி தவறான செய்திகள் வந்த அவரது கேரியருக்கு முட்டுக்கட்டை போட சிலர் எண்ணுவதாகவும் அதில் இருந்து கீர்த்தி சுரேஷ் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Also Read : விஜய் சேதுபதியுடன் இணைய இருந்த கீர்த்தி சுரேஷ்.. ராமராஜனால் நடந்த டிவிஸ்ட்

Trending News