பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலன் ஆண்டனியை டிசம்பர் 12ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் நடந்துள்ளது. இருவரும் கையில் மோதிரம் மாற்றி உள்ளனர்.
மேலும் கிறிஸ்துவ திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியாக உள்ள கீர்த்தி சுரேஷ், ஆண்டனி இருவரும் லிப்லாக் கொடுத்துள்ளனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களை மட்டும் தான் அழைத்திருந்தார்.
ஏனென்றால் அவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. ஆகையால் விரைவில் சென்னையில் ரிசப்ஷன் நடக்க உள்ளது.
இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.