புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கேரளத்து பைங்கிளி.. யாராச்சு வாய்ப்பு கொடுங்கப்பா!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதாக பலரும் கூறி வருகின்றனர். தற்போது விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66 இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.

வருகின்ற ஜூன் 22ஆம் தேதி அன்று விஜயின் பிறந்தநாளையொட்டி தளபதி 66 படத்தின் டைட்டில், விஜயின் பர்ஸ்ட் லுக் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மலையாள நடிகை லிஜிமோல் ஜோஸ், ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானார். அந்தப்படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் பழங்குடி பெண்ணாகவே தத்ரூபமாக நடித்து, தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

மேலும் இந்த படத்திற்கு முன்பே தமிழ் சினிமாவிற்கு இவர்,  வெளியான ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றவர்.

தற்போது இவர் விஜயின் தீவிர ரசிகர் அவர் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார். இவரை தளபதி விஜயுடன் சேர்ந்து பார்க்க ரசிகர்களும் விரும்புவதால், ‘யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா’ என மீடியாவில் தளபதி ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் சினிமாவில் பத்மினி காலத்திலிருந்தே மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தமிழில் அதிகம் இருப்பதற்கு காரணம் கேரள நடிகைகள் தமிழில் நடித்தால் படம் ஹிட் அடிக்கும் என்பது அப்போது இருந்து இப்போது வரை தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை இருக்கிறது.

அதனால் தான் தற்போதும் கேரள நடிகைகளான நயன்தாரா, அசின், லக்ஷ்மிமேனன், ரம்யா நம்பீசன், மஞ்சிமா மோகன், அனுபமா பரமேஸ்வரன், பார்வதி மேனன், மாளவிகா மேனன் என பலரும் தமிழ் படங்களில் கொடிகட்டிப் பறப்பதால் அவர்களது லிஸ்டில் சேர லிஜிமோல் ஜோஸ் ஆசைப்படுகிறார்.

Trending News