சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கேரளாவிலும் வசூலில் கொடி கட்டி பறக்கும் விஜய்.. கடுப்பில் மலையாள நடிகர்கள்!

பிரபல நடிகர் விஜய்க்கு தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு கேரளாவிலும் ரசிகர்கள் உள்ளனர். கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு விஜய் படத்திற்கும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சமீபகாலமாக விஜய் படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வசூலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக கேரள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இடையே தான் வசூல் போட்டி இருந்து வந்தது.

இந்நிலையில் அவர்களை பின்னுக்குத்தள்ளி விஜய் படங்கள் அதிக வசூலை வழங்கி வருகிறது. மலையாளத்தில் பிரித்விராஜ், பகத் பாசில், நிவின் பாலி போன்ற திறமையான நடிகர்களின் படங்களும் நல்ல வசூலை பெற்று வருகின்றன.

இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்கள் கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதால் விஜய் படங்கள் வெளியாகும் தினத்தை திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் போட்டி என்பது விஜய்க்கும், மோகன்லாலுக்கும் இடையில் தான் உள்ளது. முதல் நாள் வசூலில் முதல் 5 இடங்களைப் பிடித்த படங்களில் விஜய் நடித்த இரண்டு படங்கள் உள்ளன. கேரளாவிலும் விஜய் வசூலில் சாதனை படைத்து வருவது அவர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vijay-cinemapettai
vijay-cinemapettai

Trending News