புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கேஜிஎஃப் 2 படத்திற்கு 250 கோடியைக் கொண்டு சென்ற பிரபல ஓடிடி நிறுவனம்.. யாஷ் சொன்ன ஒத்த வார்த்தை!

இந்திய சினிமாவே அடுத்து மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கே ஜி எஃப் 2. பிரபல கன்னட நடிகர் யார் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது கே ஜி எஃப் 2 திரைப்படம்.

முன்னதாக கடந்த ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு கொரானா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி விட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் மிகப் பெரிய ஓடிடி நிறுவனம் ஒன்று கேஜிஎஃப் 2 படத்தை சுமார் 250 கோடிக்கு வாங்க முன்வந்ததாம். பக்கமாக தியேட்டர்கள் திறக்கப்படுவதற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் இல்லாததால் ஓடிடி நிறுவனம் தைரியமாக படக்குழுவை அணுகியுள்ளது.

அவர்களும் ஏதேதோ சொல்லிப் பார்த்து விட்டார்கள். மேலும் இன்னும் சில நூறு கோடிகள் அதிகமாக கேட்டாலும் கொடுப்பதற்கு தயாராக இருந்ததாம் அந்த ஓடிடி நிறுவனம். இதனால் சபலமடைந்த தயாரிப்புத்தரப்பு எதற்கும் நடிகரிடம் ஒரு வார்த்தை கேட்டு கொள்ளலாம் என ஹீரோவுக்கு போன் போட்டுள்ளனர்.

அதைக்கேட்ட யாஷ், இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என சொல்லி விடுங்கள் என்று கூறிவிட்டாராம். ஹீரோவின் முடிவுக்கு மறுபேச்சு ஏது என தயாரிப்பு நிறுவனமும் ஓடிடி நிறுவனத்தை டாட்டா காட்டிய வழியனுப்பி விட்டதாம்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படத்தை நாள்கணக்கில் ஓரம் கட்டி வைத்திருந்தால் படம் வெளியாகியும் பெரிய அளவு பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்பதை எப்படி ஹீரோவுக்கு எடுத்துச்சொல்வேன் என தயாரிப்பு நிறுவனம் ஒரு பக்கம் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறதாம்.

kgf-2-cinemapettai-0
kgf-2-cinemapettai-0

Trending News