திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கங்குவா படத்தில் சூர்யாவை மிரட்ட வரும் கேஜிஎஃப் நடிகர்.. சரியாக தூண்டில் போட்ட சிறுத்தை சிவா

Actor Surya In Ganguva Movie: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கற்பனைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் நடிகை திஷா பாதனி, மிருணால் தாக்கூர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் தற்போது இப்படத்தின் பிளாஸ்பேக் காட்சிகள் சம்பந்தமான படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இது முடிந்த பிறகு அடுத்த படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் கொடைக்கானல் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Also read: விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. சைலண்டாக நடந்த மீட்டிங்

அத்துடன் இப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளதால் அதற்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது சூர்யாவிற்கு தகுந்த வில்லனைத் தேடும் முயற்சியில் இறங்கி விட்டார்கள்.

அதற்காக கன்னடத்தில் சூப்பர் ஹிட் படமான கேஜிஎஃப் படத்தில் வில்லனாக மிரட்டிய அவினாஷ் என்பவர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்த படத்தில் சரித்திர காலப்பகுதியில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், கே ஜி எஃப் படத்தை விட டபுள் மடங்காக மிரட்டலாக இவருடைய கேரக்டர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Also read: பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

இந்த தகவலை அவினாஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனால் தற்போது கூடுதலாகவே கங்குவா படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சிறுத்தை சிவா க்கு கைவந்த கலை. அதாவது யாரை எந்த கேரக்டரில் நடிக்க வைத்தால் எப்படி மக்களிடம் ரீச் ஆகும் என்று இவருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். எல்லா விதத்திலும் தூண்டில் போட்டு படத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் ராஜதந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார்.

Also read: ஜோதிகா போலவே சூர்யா எடுத்திருக்கும் தில்லான முடிவு.. கேப்பில் கிடா வெட்டிய பட வாய்ப்பு

Trending News