கேஜிஎப் படங்களுக்கு முன்னர் வரை கன்னட சினிமாவா என கேவலமாக பார்த்த பிரபலங்கள் கூட இன்று கன்னட சினிமாவா! என ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உயர்ந்து விட்டது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் கே ஜி எஃப் படம் தான்.
இப்படி ஒரு தரமான ஆக்ஷன் படத்தை இதுவரை எந்த ஒரு சினிமாவும் கண்டதில்லை. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உருவான கே ஜி எஃப் படம் இந்திய சினிமா வசூலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
கே ஜி எஃப் படங்கள் மட்டுமல்லாமல் சமீபகாலமாக கன்னட சினிமாவில் உருவாகும் காதல் படங்கள் முதல் ஆக்ஷன் படங்கள் வரை அனைத்துமே மற்ற மொழி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.
அந்த வகையில் அடுத்ததாக கன்னட சினிமாவில் இருந்து மிக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் கேஜிஎப் சாப்டர்2. பல இந்திய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கே ஜி எஃப் 2 படத்திற்கு மட்டும் நடிகர் யார் கிட்டத்தட்ட 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளாராம். முதல் பாகத்தில் இதில் பாதி கூட சம்பளம் வாங்கவில்லையாம் யாஷ். அடுத்தடுத்து யாஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஐந்து மொழிகளில் வெளியாகும் என்பது கூடுதல் தகவல்.
சமீபத்தில் கூட கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 2வது வாரத்தில் 160 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது. உலக அளவில் ஒரு டீசர் அதிக பார்வையாளர்கள் பெற்றது கே ஜி எஃப் 2 படம் தான் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.