கன்னட சினிமாவில் இருந்து வெளியாகும் படங்கள் கேஜிஎஃப்க்கு முன்பு, கேஜிஎஃப்க்கு பின்பு என்று நிர்ணயம் செய்யும் அளவுக்கு ஒரு வசூல் பிரளயத்தையே இந்திய சினிமாவின் திரைக்கதை மொழியிலும், அப்படத்தின் மேக்கிங்கிலும் உண்டு பண்ணியது.
அதேமாதிரி கேஜிஎப் ஹீரோ யாஷின் நடிப்பில், அவரது ஸ்கிரீன் பிரசென்ஸும், பிரசாந்த் நீலின் திரைக்கதை, ஆக்கமும் இந்திய சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டது. அப்படத்துக்குப் போட்டியாக வெளியான எந்த ஒரு படமும் கேஜிஎஃப்க்கு முன் நிற்காது என்பதுபோல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கேஜிஎஃப் வசூல் வேட்டை நடத்தியது.
கேஜிஎஃப் படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக உயர்ந்துள்ள யாஷின் அடுத்த படமும், கேஜிஎஃப் 2 ஆக அமைந்தது. ராக்கி பாய் வேடத்தில் கேங்ஸ்டராக நடித்த யாஷூக்கு அந்த கேரக்டர் பொருத்திப் போக, ஆக்சன் காட்சிகளில் அதகளம் பண்ணியிருந்தார்.
பொதுவாக இந்திய சினிமாவில் 2 வது பாகம் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாது. அப்படியிருந்தாலும் வசூலில் சொதப்பி விடுவதுண்டு. ஆனால், ராக்கி பாயின் அவதாரம் அதையெல்லாம் மாற்றிப்போட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு படம் வெளியாகும் முன்பே கேஜிஎஃப் 2 பார்க்க ஸ்கூல் பரீட்சைக்கும, லீவு வேண்டும் என மாணவர்கள் கோரிக்கையும் விடுத்தனர்.
அந்தளவு ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற படமாகவும் எல்லோருக்கும் பிடித்தமான நடிகராகவும் யாஷ் உருவாகியுள்ளார். அதன்படி, முதல் பாகம் வசூலை முறியடித்து, விஜய்யின் பீஸ்ட் படத்துடன் போட்டியாக ரிலீஸாகி வசூலிலும் கல்லா கட்டியது. எனவே உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது கேஜிஎஃப் 2.
இதன் 3வது பாகம் எப்போது வரும் என ரசிகர்களை ஏங்க வைத்துள்ள நிலையில், தற்போது கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார் யாஷ். இவர், இன்று கன்னட சினிமாவின் ஸ்டாராகவும், பான் இந்தியா ஸ்டாராகவும் உருவெடுத்துள்ள நிலையில், இவர் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கிறார்.
களவாணி படத்தின் கன்னட ரீமேக்
அதில், தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தது வேறு யாரும்ம, நம்ம ராக்கி பாய் யாஷ்தான். கடந்த 2011 ஆம் ஆண்டு கன்னடத்தில் கிராதகா என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்ட அப்படத்திலும் யாஷுக்கு ஜோடியாக ஓவியா நடித்தது குறிப்பிடத்தக்கது.
![kgf, kirathaka](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/11/kgf-krathaka-1024x512.webp)
இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராக்கி பாய் யாஷ் இப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் பவ்யமாக அப்பாவி பையன் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.