செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஒரே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற ராக்கி பாய்.. கோடிகளில் புரளும் கேஜிஎப் ஹீரோவின் சொத்து மதிப்பு

Yash’s Net Worth: சர்வதேச அளவில் கவனம் பெற்ற கேஜிஎஃப் தான் யாஷ் என்ற ஒரு நடிகரை அடையாளம் காட்டியது. சீரியல் நடிகராக தன் பயணத்தை தொடங்கிய இவர் தமிழில் ஹிட்டடித்த களவாணி, சுந்தரபாண்டியன் படங்களின் ரீமேக்கில் நடித்து பிரபலமானார்.

இப்படியாக சிறு பட்ஜெட் படங்களில் நடித்த யாஷ் இன்று கோடிகளில் புரளும் நடிகராக மாறி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் கே ஜி எஃப் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராக்கி பாயாக கொண்டாடப்பட்டு வரும் இவர் இன்று தன்னுடைய 38 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாஷின் மொத்த சொத்து மதிப்பு விவரம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது. அதன்படி இவர் ஆரம்ப காலகட்டத்தில் சில ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவராக தான் இருந்தார்.

Also read: நட்புக்காக கேஜிஎஃப் ஹீரோ செய்யும் வேலை.. ரஜினியை கௌரவ படுத்தியவர்களுக்கு யாஷ் செய்த நன்றி கடன்

அதை அடுத்து லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த இவர் இன்று கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார். அதன்படி கேஜிஎஃப் முதல் பாகத்திற்காக இவருக்கு முதலில் நான்கு கோடி தான் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படத்தின் வரலாறு காணாத வெற்றியை அடுத்த இவருக்கு 15 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் இரண்டாம் பாகத்திற்காக 30 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் யாஷ் விளம்பர படத்தில் நடித்தே மாதம் 60 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அதன்படி பார்த்தால் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 65 கோடியை தாண்டும் என்கின்றனர்.

மேலும் ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார்கள் என பல சொத்துக்கள் இவரிடம் இருக்கிறது. அதில் இவரின் மொத்த கார்களின் மதிப்பே மூன்று கோடியை தாண்டும். இப்படி கடந்த ஐந்து வருடமாக தான் யாஷின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது. எல்லாம் கேஜிஎஃப்-ன் மாயம் தான்.

Also read: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தளபதியின் முரட்டு வில்லன்.. உதவிக்கரம் நீட்டிய விஜய், யாஷ்

Trending News