வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாஸ் இயக்குனருடன் இணைந்த உலக நாயகன்.. ஆரவாரமாக வெளியான KH-233 அறிவிப்பு

Actor Kamal: கடந்த சில நாட்களாகவே கமல் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. விக்ரம் மூலம் தன்னுடைய மறுபிரவேசத்தை ஆரம்பித்த ஆண்டவர் இப்போது நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு பிசியாக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் இன்னும் சில டாப் ஹீரோக்களையும் வளைத்து போட்டு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க மணிரத்தினத்தின் படம், ப்ராஜெக்ட் கே என நடிப்பிலும் கமல் கவனம் செலுத்தி வருகிறார்.

Also read: நடிகர்களின் வலையில் சிக்கி கொள்ளாமல் தப்பித்த நடிகை.. கமல் ரஜினியுடன் நடிப்பதற்கு அறவே மறுத்துவிட்ட நாயகி

இந்த சூழலில் இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பு வரும் என ராஜ்கமல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரசிகர்கள் அது எந்த மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என்று சலசலக்க தொடங்கிவிட்டனர்.

அதன்படி தற்போது கமலின் 233 வது படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். ஏற்கனவே இது குறித்த அரசல் புரசலான செய்திகள் மீடியாவில் கசிந்து கொண்டு தான் இருந்தது.

Also read: அவ்ளோ நேரம் என் உதடு கொடுக்க முடியாது என கூறிய மண்வாசனை நடிகை.. கேரக்டரையே தூக்கிய கமல்

ஆனாலும் இந்த கூட்டணி உருவாகுமா என்ற ஒரு சந்தேகமும் ப்ராஜெக்ட் கே படத்தின் அறிவிப்பால் எழுந்தது. மேலும் வினோத் வேறு படத்தில் கவனம் செலுத்த போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கும் பொருட்டு தற்போது ஆரவாரமான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் குஷிப்படுத்தி இருக்கிறார் உலக நாயகன்.

மேலும் வீடியோவாக வெளிவந்த இந்த அறிவிப்பில் உலக நாயகன் மக்களின் குரலாக கை ஓங்கி இருப்பது போன்ற காட்சியும் காட்டப்படுகிறது. மேலும் Rise To Rules என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இப்படம் நிச்சயம் ஒரு சமுதாய பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் இந்த பட அறிவிப்பு தற்போது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News