ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பூஜையே போடல அதுக்குள்ள இத்தனை கோடியா.? வாய் பிளக்க வைத்த KH-233

Actor Kamal: இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கமல் இப்போது மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார். ஒரு பக்கம் தயாரிப்பு, ஒரு பக்கம் அரசியல், ஒரு பக்கம் நடிப்பு என அவர் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை வேறு அவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இப்படி கொஞ்சம் கூட சோர்வடையாமல் இருக்கும் கமல் தற்போது தன்னுடைய 233 வது பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்த அறிவிப்பு எதிர்பார்த்தது தான் என்றாலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருப்பது ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது.

Also read: மாஸ் இயக்குனருடன் இணைந்த உலக நாயகன்.. ஆரவாரமாக வெளியான KH-233 அறிவிப்பு

அந்த வகையில் ஹெச் வினோத், உலக நாயகன் கூட்டணியில் பிரம்மாண்டமான இப்படம் உருவாக இருக்கிறது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு சமூக விஷயத்தை உள்ளடக்கி எடுக்கப்பட இருக்கிறது. இதுவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படத்தின் பிசினஸ் கூட தாறுமாறாக இருப்பது பலரையும் மிரட்டி உள்ளது.

அதன்படி படத்தின் பூஜை ஆரம்பிக்கும் முன்பாகவே டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. அந்த வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடிகளை கொடுத்து இப்படத்தை தட்டி தூக்கி இருக்கிறது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

Also read: தசாவதாரத்தை விட இரண்டு மடங்கு கெட்டப் போட்டு அசத்த போகும் கமல்.. இது அல்லவா பிரம்மாண்டம்

இதுதான் கமல் ரசிகர்களை தற்போது கொண்டாட வைத்திருக்கிறது. இதற்கு முன்பாக கமலின் விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதையே ஓவர் டேக் செய்யும் வகையில் இப்படம் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வியாபாரம் செய்து பலரையும் கதி கலங்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் ஆண்டவர் தன் முந்தைய பட சாதனையை இவரே முறியடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறாக அதிரி புதிரி கொண்டாட்டத்துடன் வெளிவந்துள்ள இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் கமல், ஹெச் வினோத் இருவரும் தரமான சம்பவத்திற்கு தயாராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜயகாந்தை ரோல் மாடலாய் எடுக்கும் தளபதி.. விஜய்யின் அரசியல் புதிய கருத்துக்கணிப்பு

Trending News