வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பூஜையே மிரட்டலா இருக்கே.. KH 234-ல் கமலுடன் கைகோர்க்கும் ஜாம்பவான்கள்

KH 234 Pooja: இப்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனமும் நவம்பர் 7ஆம் தேதி மேல் தான் இருக்கிறது. உலக நாயகனின் பிறந்த நாளான அன்று KH 234 படத்தின் டீசர் வெளிவர இருக்கிறது. இது பற்றிய குறிப்பை அவர் ஏற்கனவே கொடுத்திருந்த நிலையில் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி இருந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது கமலின் ராஜ்கமல் நிறுவனம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இரு ஜாம்பவான்கள் ஒன்று கூடி இருக்கும் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ஆரம்பமே அமர்க்களம் என்று நினைக்கும் வகையில் நாயகனில் கமல் பேசும் நா அடிச்சா நீ செத்துருவ என்ற வசனத்துடன் வீடியோ தொடங்குகிறது.

அதை தொடர்ந்து அசத்தலான பின்னணி இசை உடன் ஸ்டைலாக போன் பேசியபடி கருப்பு நிற உடையில் ஆண்டவர் வந்து இறங்குகிறார். அவருக்கு அடுத்த படியாக மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் என ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்கின்றனர். இப்படியாக வெளிவந்துள்ள வீடியோவில் படத்தில் பணியாற்றும் கலைஞர்களின் விவரமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் நட்சத்திரங்களின் பெயர் வெளியாகாமல் திரைக்குப் பின்னால் பணிபுரிபவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒளிப்பதிவு ரவி கே சந்திரன், சண்டை அன்பறிவு, எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத் என பலமான கூட்டணியாக இருக்கிறது. இதிலிருந்து படம் எந்த அளவுக்கு மிரட்டலாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போது கமல், ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ஹச் வினோத்துடன் இவர் இணையும் படமும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இப்படியாக அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து திக்கு முக்காட செய்து வரும் ஆண்டவர் இந்த வருட பிறந்த நாளை புது அப்டேட் மூலம் அமோகமாக கொண்டாட இருக்கிறார்.

Trending News