ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குந்தவைக்கு டஃப் கொடுக்கும் குஷ்புவின் மகள் அவந்திகா புகைப்படம்.. அடுத்த ஹீரோயின் ரெடி

Actress Kushboo: ஒரு காலத்தில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் திரையுலகை ஆட்சி செய்து வந்த குஷ்பூ இப்பொழுது அரசியலிலும் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். மனதில் பட்டதை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசும் குணமுடைய இவரைச் சுற்றி எப்போதுமே ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஆனால் அதையெல்லாம் இவர் கண்டு கொள்வது கிடையாது. இப்படி அரசியலில் பிசியாக இருக்கும் நேரத்திலும் இவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய மகளின் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய இளவரசி என குறிப்பிட்டுள்ளார்.

Also read: மருத்துவமனையில் படுத்த படுக்கையான குஷ்பூவின் புகைப்படம்.. என்னாச்சு என ஷாக்கான திரையுலகம்

நட்சத்திர ஜோடியாக வலம் வரும் குஷ்பூ, சுந்தர் சி தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் அவந்திகா அச்சு அசல் குஷ்பூ போன்று இருப்பார். அதிலும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் போட்டோக்கள் அனைத்தும் பயங்கர ட்ரெண்ட் ஆகும்.

அதில் முக்கால்வாசி இவர் கிளாமர் போட்டோக்களை தான் வெளியிடுவார். குட்டி உடையில் முடியை கலர் கலராக கலரிங் செய்து இவர் வெளியிடும் போட்டோக்கள் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றதுண்டு. ஆனாலும் இவர் தன் அம்மா போன்றே எந்த விமர்சனங்களையும் கருத்தில் கொள்வது கிடையாது. அந்த வகையில் தற்போது குஷ்பூ வெளியிட்டு இருக்கும் போட்டோவில் அவந்திகா மொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.

Also read: உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.? தவறாக விமர்சித்தவரின் வீட்டுப் பெண்களை வம்புக்கிழுத்த குஷ்பூ

அதாவது புடவை, நகை, பூ என்று குடும்ப குத்து விளக்காக அவர் அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த பலரும் வருஷம் 16 படத்தில் வரும் குஷ்பூ போன்றே இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த இளவரசியின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவந்திகா குந்தவை த்ரிஷாவுக்கே டப் கொடுப்பாங்க போல என கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ள அவந்திகா எப்போது வேண்டுமானாலும் ஹீரோயினாக என்ட்ரி கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இளம் ஹீரோயின்களை ஓவர் டேக் செய்ய அடுத்த ஹீரோயின் ரெடியாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

குந்தவைக்கு டஃப் கொடுக்கும் குஷ்புவின் மகள் அவந்திகா

avantika-sundar
avantika-sundar

 

Trending News