திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம், சூர்யாவுக்கு போட்டியாக கெட்டப் மாற்றும் கில்லாடி நடிகர்.. ஓவர் ரிஸ்க் எடுத்ததால் கதறி அழுத அம்மா

தமிழ் சினிமாவில் கெட்டப் மாற்றுவதற்கு பெயர் போனவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் தான். கேரக்டருக்கு தேவை என்றால் கடுமையாக ரிஸ்க் எடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் தமிழ் சினிமாவின் கெட்டப் கிங் என்று அவர்களை சொல்லலாம். அதனால் தான் அவர்கள் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகின்றனர்.

அவர்களுக்குப் பிறகு இதுபோன்று கேரக்டர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் என்றால் ஆர்யாவை சொல்லலாம். இவரும் கதைக்குத் தேவை என்றால் கடின உழைப்பை கொடுப்பதற்கு கொஞ்சமும் தயங்காதவர். அந்த வகையில் நான் கடவுள், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்காக இவர் அளவுக்கு அதிகமான கடின உழைப்பை கொடுத்திருந்தார்.

Also read:2022-ம் ஆண்டிற்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள்.. தொடர்ந்து வெற்றிக் கொடியை பறக்கவிடும் சூர்யா

அதிலும் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் இவர் உடல் எடையை அதிகப்படுத்தி நீண்ட தலை முடியுடன் அகோரி போன்ற தோற்றத்தில் இருப்பார். மேலும் தன்னுடைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்றி ஆக்ரோஷமான நடிப்பை அவர் அதில் வெளிப்படுத்தி இருப்பார்.

அவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்த பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அவருடைய அந்த முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் பலனாக விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தது. ஆனால் அவர் அந்தப் படத்திற்காக இப்படி கஷ்டப்படுவதை பார்த்து அவருடைய அம்மா கதறி அழுதார்களாம்.

Also read:பொன்னியின் செல்வனுக்கு 11 வருடத்திற்கு முன்பே மணிரத்தினம் போட்ட பிள்ளையார் சுழி.. மொத்தத்தையும் கெடுத்து சின்னாபின்னமாக்கிய விக்ரம்

பொதுவாக பாலா திரைப்படம் என்றாலே அதில் நடிப்பவர்கள் கஷ்டப்பட்டு தான் நடிக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர் டார்ச்சர் செய்வார். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஆர்யா எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து இருப்பார் என்பது பலருக்கும் தெரியும்.

அதிலும் அந்த படம் தயாராகி வெளிவருவதற்கு சில குறிப்பிட்ட வருடங்கள் ஆனது. அத்தனை வருடங்களும் ஆர்யா அதே போன்ற தோற்றத்தில் தான் இருந்தாராம். இதுதான் அவருடைய அம்மாவை கண்கலங்க வைத்திருக்கிறது. ஆனால் அந்த கேரக்டர் இப்போது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

Also read:கமலுக்கு கல்தா கொடுத்துவிட்டு ஜோராக நடக்கும் வேலை..ஆர்யா அதிகமாக எதிர் பார்த்ததால் வந்த வினை

Trending News