வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மகனுடன் புகைப்படம் வெளியிட்ட கிங் காங்.. அடுத்த வாரிசு நடிகர் ரெடியா.?

தமிழ் சினிமாவில் நெத்தியடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கிங்காங். ஆனால் இவருடைய இயற்பெயர் சங்கர். இவரை பாண்டிராஜ் தான் சினிமாவுக்கு அழைத்து வந்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அறியப்படும் அளவிற்கு பிரபலம் ஆனார் கிங்காங்.

அதற்கு காரணம் இப்படத்தில் கிங்காங் சிறு சிறு காட்சிகளில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் ரசிக்க கூடிய அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் இடம்பெற்றன. அதன்பிறகு தொடர்ந்து தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிசயபிறவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

king kong
king kong

கிங்காங் எப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாரோ அதே அளவிற்கு காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேல் போன்ற  நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் கூட ரஜினிகாந்த் கிங்காங் உடன் தொலைபேசியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலானது.

தற்போது தன்னுடைய மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல வருடங்களாக  கிங் காங்  மகனை  பார்க்காத ரசிகர்கள் தற்போது புகைப்படத்தை பார்த்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Trending News