வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிரண் ராத்தோட்டின் மட்டமான செயல்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல

தன்னிடம் பேசுவதற்காகவே ஆப் லிங்கினை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் நடிகை கிரணின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 2001ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கிரண்.

இதனையடுத்து அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிரண் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில் பல திரைப்படங்களில் ஐட்டம் டான்ஸராக களமிறங்கியதை அடுத்து, பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

முத்தின கத்திரிக்காய், சகுனி, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வந்த கிரண், தற்போது படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியாக இருக்கும்.

அப்படியாவது ஏதேனும் படவாய்ப்புகள் வருமா என எதிர்பார்த்த கிரண், ஒன்றும் வராததால் சற்றும் யோசிக்காமல் தனது பெயரில் ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் ,5 நிமிடங்கள் என்னுடன் தொலைபேசியில் பேச பத்தாயிரம் ரூபாய், 25 நிமிடங்கள் வீடியோ காலில் பேச 25000 ரூபாய், தனது கவர்ச்சியான புகைப்படத்தை நேரடியாக வாடிக்கையாளரின் நேரடி மெசேஜ் சேவைக்கே அனுப்ப இரண்டாயிரம் ருபாய் என லிஸ்ட் போட்டபட்டுள்ளது.

மேலும் கிரணின் இரண்டு புகைப்படங்களுக்கு ஆயிரம் ரூபாய், 15 நிமிடங்கள் கிரானுடன் தனியாக பேசும் வீடியோ காலிற்கு 14000 ருபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதனை பயன்படுத்துவதற்கு முன் 49 ரூபாய் தனியாக கட்ட வேண்டுமாம். இதனை பார்த்த பலரும் நடிகை கிரனை கலாய்த்ததோடு மட்டுமில்லாமல், இந்த ஆப்பை தடைசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கிரனுக்கு ,தற்போது 41 வயதாகும் நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இதனிடையே தற்போது இந்த ஆப்பை நடிகை கிரண் சம்பாரிப்பதற்காக இப்படியொரு யோசனை செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Trending News