செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கிருத்திகா உதயநிதியின் புதிய பட போஸ்டர் வெளியீடு.. ஜெயம் ரவியை வைத்து ரெட் ஜெயண்ட் போடும் வசூல் கணக்கு

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாக படங்கள் சொல்லும் அளவிற்கு போகாமல் இருந்தது. அவருடைய மார்க்கெட்டை மொத்தமாக தூக்கி விடும் வகையில் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆனது. இனி ஜெயம் ரவியின் மார்க்கெட் அப்படியே உச்சத்தில் தான் இருக்கும் என்று நினைத்த நிலையில், இறைவன் படம் ரிலீஸ் ஆகி மொத்தமாய் சொதப்பிவிட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சைரன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து ரவி நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வரிசையில் இன்று அவருடைய 33வது படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி

வணக்கம் சென்னை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேப்பர் ராக்கெட் என்னும் வெப் சீரிசை இயக்கியிருந்தார். அதன் பின்னர் சத்தமில்லாமல் நடிகர் ஜெயம் ரவியை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு 60களில் ரிலீஸ் ஆகி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டிலேயே வைத்திருக்கிறார்கள்.

Also Read:கீரியும், பாம்புமாய் சண்டை போடும் ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர்.. பார்க்கிங் எப்படி இருக்கு? ரிவ்யூ ஷோ விமர்சனம்

திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நித்யா மேனன் மீண்டும் தமிழில் ஜெயம் ரவியுடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டைட்டில் மட்டும் தான் காதலிக்க நேரமில்லை. முதல் போஸ்டரில் ரவி மற்றும் நித்யா மேனன் இருவரும் படு ரொமான்ஸ் ஆக போஸ் கொடுத்திருக்கிறார்கள். ரவியின் தோளில் நித்யாமேனன் சாய்ந்திருப்பது போல அந்த போட்டோ இருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியை ரொமாண்டிக் ஹீரோவாக பார்க்கலாம். நித்யா மேனன் ஏற்கனவே ஓகே காதல் கண்மணி படத்தில் படு ரொமான்டிக்காக நடித்து, இளைஞர்களை கிரங்கடித்தவர். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு காதல் கதையில் நடிப்பதை போல தான் போஸ்டரை பார்த்தால் தெரிகிறது.

காதலிக்க நேரமில்லை படத்தின் போஸ்டர்

KN poster
KN poster

கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்தை ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:2 தோல்வி படங்களை மட்டுமே கொடுத்த இயக்குனர்.. லோகேஷை பின்னுக்கு தள்ளக்கூடிய டைரக்டர்

Trending News