புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

2k கிட்ஸ் தோத்துருவாங்க போங்க.. தலைவர் ஸ்டைலில் இறுக்கி அணைச்சு முத்தம் கொடுத்த குஷ்பூவின் புகைப்படம்

Actress Kushboo: குஷ்பூ ஹீரோயின்கள் வயதை தாண்டி வந்தாலும் தற்போதும் அவருக்கான ரசிகர்கள் கொஞ்சம் கூட குறையவில்லை. அதேபோல் தனது இளமையும் மங்காமல் இப்போது வரை காத்து வருகிறார். ஒரு புறம் சினிமா, அரசியல் என பிசியாக ஓடிக்கொண்டாலும் தனது உடல்நிலை மீது அக்கறை வைத்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்திற்கான நேரத்தையும் செலவழித்து வருகிறார். 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட குஷ்பூவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமாவில் வருவதற்கு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மேலும் அதற்கான படிப்பை தான் இருவரும் படித்து வருகிறார்கள்.

Also Read : அப்பாவை மிஞ்சிய உயரம், அமுல் பேபி போல் இருக்கும் அவந்திகா புகைப்படம்.. குஷ்பூவை ஓவர் டேக் செய்யும் அழகு

இந்நிலையில் குஷ்பூ அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். முத்து படத்தில் தலைவர் எப்படி இறுக்கி அணைச்சு முத்தம் கொடுப்பாரோ அந்த ஸ்டைலில் குஷ்பூவும் கொடுத்திருக்கிறார்.

அதாவது தனது கணவர் சுந்தர்-சிக்கு குஷ்பூ முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணமாகி கிட்டதட்ட 23 வருடங்கள் ஆகியும் இவர்களது காதல் குறையவில்லை என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சியாக அமைந்துள்ளது.

Also Read : ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்ட 6 நடிகைகள்.. குஷ்பூவால் ஆரம்பித்த மட்டமான வேலை

அதோடு மட்டுமல்லாமல் இவர்களது திருமணம் ஆனபோது நீண்ட நாட்கள் இது நீடிக்காது என பல விமர்சனங்கள் இருந்தது. அதற்கு சவுக்கடி கொடுக்கும் விதமாகத்தான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட்களை அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்களின் காதலை பார்த்த ரசிகர் ஒருவர் 2கே கிட்ஸ் தோத்துருவாங்க போங்க என்று கமெண்ட் செய்திருக்கிறார். மேலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இதே அன்பு காதலுடன் குஷ்பூ மற்றும் சுந்தர்சி இருவரும் இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

kusboo-sundar c
kusboo-sundar c

Also Read : சுந்தர் சி, லாரன்ஸ் கூட ஜோடி போட்டு சோலியை முடித்த 5 நடிகைகள்.. ஆடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாத பரிதாபம்

Trending News