ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சேவாக் மற்றும் சச்சின் செய்ய தவறிய சாதனை.. அசால்ட் பண்ணிய கே எல் ராகுல்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நேற்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 248 பந்துகளுக்கு 122 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

மற்றொரு ஓபனர் ஆன மயங்க் அகர்வால் 123 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார். அவருக்குப் பின் இறங்கி விளையாடிய புஜாரா முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். கேப்டன் விராட் கோலி சிறிது நேரம் தாக்குப் பிடித்து 35 ரன்களில் அவுட் ஆனார்.

கே எல் ராகுல் ஒரே ஆண்டில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் இடம் பெறுகிறார். சச்சின் சேவாக் கூட  இந்த சாதனையை படைத்தது இல்லை. இந்திய அணியின் டெஸ்ட் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இடையில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும்  ராகுல் நிகழ்த்தியுள்ளார்.

கேஎல் ராகுல் அடித்த 7  சதங்களில் 6 வெளிநாடுகளிலும் ,ஒரே ஒரு சதம் மற்றும் இந்திய மண்ணிலும் அடித்துள்ளார். ஒரே ஆண்டில் இத்தனை நாடுகளுக்கிடையே யாரும் சதம் அடிக்கவில்லை.

Trending News