வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க தயாராகும் கமல்.. அசத்தப் போகும் விக்ரம் கூட்டணி

உலக நாயகன் கமலஹாசன், தான் அடுத்து நடிக்கப்போகும் தேவர்மகன்-2 திரைப்படத்தில் விக்ரம் படத்தில் நடித்த இரு முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் சாதனையையும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன், அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் முதலில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தேவர்மகன்-2 திரைப்படத்தில் நடிக்கப் போவது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் கதையை கமலஹாசன் எழுதும் நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். ஏற்கனவே இத்திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது இதனிடையே 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் திரைப்படத்தின் தொடர்கதையாகவே தேவர்மகன் 2 உருவாக உள்ளது.

தேவர் மகன் திரைப்படத்தில் கமலஹாசனின் தந்தையாக சிவாஜிகணேசன் நடித்திருப்பார். தற்போது தேவர்மகன்-2 வில் சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தில் கமலஹாசனும், கமலஹாசனின் மகனாக விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் தேவர்மகன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த நாசர், தேவர் மகன் 2 விலும் நடிப்பார் என்றும் இவருடைய மகனாக பகத் பாசில் நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தின் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு பெருமளவு பேசப்பட்ட நிலையில், கமலஹாசனுக்கு அவர்களது நடிப்பு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்ததாக தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக தேவர் மகன் 2 திரைப்படத்தில் இருவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கமலஹாசன் தேர்வு செய்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் சங்கரின் இந்தியன்2 திரைப்படத்திலும் கமல் நடிப்பார் என்றும், 2017 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய சபாஷ் நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News