Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரி சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார். அதிலும் பாக்கியாவின் வீக்னஸ் பாயிண்டை புரிந்து கொண்டு அதன்படி காய் நகர்த்தி வருகிறார். அதாவது காலையில் வழக்கம் போல் பாக்யா, ஈஸ்வரிக்கு காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.
ஆனால் அங்கே பக்கத்தில் இருந்த கோபிக்கு கொண்டு வராததால் ஈஸ்வரி என் பையனுக்கு காபி எங்கே என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா பதில் சொல்லாமல் போன நிலையில் ஈஸ்வரி நானே போட்டு கொடுக்கிறேன் என்று காபி போட்டு கோபிக்கு கொடுத்து விடுகிறார். அடுத்ததாக இனியா வந்ததும் இனியாவுக்கு தேவையான விஷயங்களையும் செய்து விட்டு பாக்கியா நடைப்பயிற்சிக்கு செல்வியை கூட்டிட்டு போய்விட்டார்.
இதையெல்லாம் பார்த்து கோபி, இனியாவுக்கு காலையில் சாப்பாடு மதியம் சாப்பாடு எல்லாம் தயாராகி விட்டதா என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, அதெல்லாம் யாருக்கு என்னென்ன எப்ப பண்ண வேண்டும் என்று பாக்கியா தெரிந்து கொண்டு அதை எல்லாம் செய்து முடித்துவிட்டு தான் வீட்டை விட்டு போவார். அதற்காக தினம் காலை நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பம்பரமாக சுத்தி வேலை பார்ப்பார் என்று பெருமையாக சொல்கிறார்.
உடனே எதுவுமே தெரியாதபோல் கோபியும் அப்படியா என்று ஆச்சரியமாக கேட்க ஆரம்பித்து விட்டார். இதற்கு முன் பல வருடமாக பாக்கியாவுடன் இருக்கும் பொழுது அருமை தெரியவில்லை. இப்பொழுது தான் பாக்யாவின் அறிவும், அருமையும் கோபிக்கு புரிகிறது போல. உடனே கோபியும், பாக்கியாவை பாராட்டி விட்டுப் போய்விட்டார்.
அடுத்ததாக ராதிகா, கோபியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வருகிறார். ஆனால் ராதிகாவை பார்க்கவிடாமல் ஈஸ்வரி தடுத்து நிப்பாட்டுகிறார். பிறகு பாக்கியா அவங்க கணவர் இங்கே இருப்பதால் பார்க்க வர தான் செய்வாங்க. இதை யாராலயும் தடுக்க முடியாது என்று சொல்லி ராதிகாவை போய் பாருங்க என்று அனுப்பி வைக்கிறார். அப்படி ராதிகா ரூமுக்குள் போனதும் கோபி நல்ல அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.
ராதிகா வந்தது கூட தெரியாமல் கோபி தூங்கியதால் எழுந்திருக்கவில்லை. உடனே ராதிகா தொந்தரவு பண்ண வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அடுத்து கொஞ்சம் நேரத்திலேயே கோபி எழுந்து தண்ணீர் கேட்கிறார். ஹாலில் ஈஸ்வரி தூங்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் கோபி அம்மா தண்ணி கொண்டு வாங்க என்று சொல்வது ஈஸ்வரிக்கு நன்றாக தெரிகிறது.
இருந்தாலும் அடுப்பாங்கரையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியா போய்க் கொடுக்க வேண்டும் என்பதால் ஒரு டிராமாவை அரங்கேற்றுகிறார். அந்த வகையில் தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு இருக்கிறார். உடனே பாக்யா, மனிதாபிமானம் அடிப்படையில் கோபிக்கு போய் தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறார். உடனே கோபியும் நன்றி சொல்லி பாக்கியவுடன் பேச ஆரம்பிக்கிறார்.
இதை வெளியில் இருந்து ஈஸ்வரி எட்டிப் பார்க்கிறார். பிறகு செல்வி அக்கா வந்ததும் எதுவும் நடக்காத போல் ஈஸ்வரி நடந்து கொள்கிறார். இதையெல்லாம் பார்த்து செல்வி, பாக்யாவிடம் உன் மாமியார் ஏதோ உன்னையும் கோபி சாரையும் சேர்த்து வைக்க பிளான் பண்ணி இருக்குது போல் தெரிகிறது என்று சொல்லிவிடுகிறார். ஆனால் இந்த பாக்கியாவிற்கு ஒண்ணுமே புரியாத போல் நடந்து கொள்கிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி, என் மகனும் பாக்யாவும் ஒன்றாக புரிந்து கொண்டு சேர்ந்து வாழனும் என்று சாமி கும்பிட ஆரம்பித்து விடுகிறார். ஆக மொத்தத்தில் கோபியை நம்பி வந்த பாக்கியவின் வாழ்க்கையும் கெட்டுப் போய்விட்டது, தற்போது ராதிகாவின் வாழ்க்கையும் சூனியம் ஆக்குவதற்கு ஈஸ்வரி பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். இதற்கெல்லாம் உடந்தையாக கோபியும் தெரிந்தும் தெரியாதது போல் நடித்துக் கொண்டு வருகிறார்.