தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்களில் முக்கியமானவர் என்றால் அது விஜய் ஆண்டனி தான். பல படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் கோடியில் ஒருவன். இப்படத்தை மெட்ரோ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ள இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
வரவேற்பு மட்டுமல்லாமல் வசூலிலும் படம் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி படம் வெளியான 10 நாட்களில் 10.02 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். அதுவும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலேயே படம் இவ்வளவு வசூல் படைத்துள்ளது என்றால், 100% அனுமதி இருந்தால் படம் நிச்சயம் அதிக வசூல் படைத்திருக்கும் என கூறுகிறார்கள்.
அதுவும் சாதாரணமாக அல்ல செப்டம்பர் மாதத்தில் மட்டும் கங்கனா ரணாவத்தின் தலைவி, விஜய் சேதுபதியின் லாபம், சந்தானத்தின் டிக்கிலோனா, யோகி பாபுவின் பேய் மாமா, ஹர்பஜன் சிங்கின் ப்ரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.

இதுதவிர ஓடிடியில் ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நடுவன், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார், ஆகிய படங்களும் வெளியாகின. ஆனால் செப்டம்பர் மாதம் வெளியான அனைத்து படங்களிலும் கோடியில் ஒருவன் படம் மட்டுமே இதுவரை அதிக வசூல் செய்துள்ளதாம். பிரம்மாண்டமாக வெளியான தலைவி படத்தையே விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம் ஓரம்கட்டி விட்டது.