திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

களத்தில் இறங்கிய கொக்கி குமார்.. செல்வராகவனின் தந்திரத்தில் மாட்டிக் கொண்ட தனுஷ்

இயக்குனர் செல்வராகவன் ஆரம்ப காலத்தில் வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் தற்போது இவரது படங்கள் படு தோல்வி அடைந்து வருகிறது. இவர் என்னதான் பார்த்து பார்த்து கதையை எடுத்தாலும் இவருக்கு கிடைப்பது தோல்வி மட்டுமே. தொடர்ந்து தோல்வி மட்டும் பார்த்து வந்த இவருக்கு பணப் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இதை இவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார். இவரின் மன அழுத்தத்தின் விளைவாக இணையதளத்தில் சில பதிவுகளையும் போட்டு வந்துகிட்டு இருந்தார். இந்த பதிவின் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதித்து மட்டுமில்லாமல் தனுசுக்கும் பெரிய அவமானத்தை தேடி கொடுத்தது.

Also read: செல்வராகவனை எச்சரித்த தம்பி.. ஸ்டேட்டஸை காப்பாற்ற நினைக்கும் தனுஷ்

இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனுஷ் அவரிடம் சென்று இந்த மாதிரி பதிவுகளை போடுவது நிறுத்தி விடு என்று எச்சரித்துள்ளார். பின்பு இவருக்கு திடீரென என்ன தோணுச்சுன்னு தெரியல அண்ணன் கிட்ட போயிட்டு நம்ம களத்துல இறங்கலாம் அப்படின்னு சொல்லி இருக்காரு. இதுவே இவருக்கு கிடைத்த வெற்றியா நினைக்கிறாரு.

செல்வராகவன் தந்திரமாக யோசித்து போட்ட வலையில் மாட்டிக்கொண்டார் தனுஷ். எது எப்படியோ அடுத்த படத்தை நல்லபடியாக வெற்றி படமாக கொடுக்கணும் என்று மூளையை கசக்கி கொண்டு இருக்கையில் அவருக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷமாக புதுக்கோட்டை இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்.

Also read: மனைவியால் நொந்துபோனரா செல்வராகவன்? சர்ச்சைக்குள்ளான பதிவிற்கு இதுதான் காரணம்.!

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் இதன் முதல் பாகத்தில் கொக்கி குமார் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை வெளுத்து வாங்கி இருப்பார். இதில் உள்ள கதையும் பெரிய அளவில் பேசப்பட்டு மெகா ஹிட் திரைப்படம் ஆக அமைந்தது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செல்வராகவனுக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் வெற்றியை பொருத்து அவருக்கு அடுத்தடுத்து முன்னேற்ற பாதையே நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் செல்வராகவன்.. எல்லாம் அழுவ ரெடியா இருங்க

Trending News