Kollywood Actor Ajith commits Big budget films: சிறந்த படைப்புகள் எந்த மொழிகள் தயாரானாலும் அதனை மொழியின் கண் கொண்டு நோக்காமல் கலைஞர்களின் திறமையை கொண்டாடி வருகின்றனர் சினிமா ரசிகர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது உருவாகும் ஒவ்வொரு படங்களும் பான் இந்தியா மூவியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கென பிரம்மாண்டத்தை நோக்கி பயணிக்கின்றனர் திரைத்துறையினர்.
அஜித்தின் துணிவு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களோடு வசூலில் சிறப்பான வெற்றி பெற்றதை அடுத்து மகிழ்திருமேனிவுடன் விடாமுயற்சியில் ஒப்பந்தமானார் அஜித்.
கிட்டத்தட்ட விடாமுயற்சியின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடையும் தருவாயில் உள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட போராளியின் கதை என்ற தகவல் கசிந்த நிலையில் சினிமா உலகில் பலரும் இப்படத்தை காண ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Also Read: 2023-ல் ஓடிடி-யில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. 2.5 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த அஜித்
இதன் பின் வருடத்திற்கு ஒரு படம் என்பது வேலைக்கு ஆகாது என்பதே உணர்ந்தாரோ என்னவோ? அடுத்தடுத்து பல வெற்றி இயக்குனர்களிடம் கூட்டணி வைத்து தனது அடுத்த படங்களுக்கான திட்டத்தை வடிவமைத்து உள்ளார் அஜித்.
விடாமுயற்சிக்கு பின் ஏகே 63 காக அஜித், மார்க் ஆண்டனி புகழ் ஆதிக்ரவிச்சந்திரன் உடன் இணைந்துள்ளார். அல்லு அர்ஜுனின் புஷ்பாவை கொடுத்த டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் அஜித்தின் ஏகே 63 தயாரிக்க உள்ளது. பான் இந்தியா மூவியாக ரெடியாக உள்ள இந்த படத்திற்காக 400 கோடி பட்ஜெட் ஒதுக்கி உள்ளார்கள்.
அஜித் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணி உறுதியானதை அடுத்து வெற்றிமாறனுடன் நடிக்கும் படத்திற்கு 300 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது சும்மாவே வெற்றிமாறன் தரமா செய்வாரு. பெரிய பட்ஜெட் என்றால் கேட்கவா வேணும் அஜித்துடன் தெறிக்க விடப் போகிறார். அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லாத நிலையில் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி பெயரும் அஜித்தின் பிரம்மாண்ட கூட்டணியில் அடிபடுகிறது. காலம் மாறினால் இயக்குனரும் மாறலாம்.
Also Read: எது செஞ்சாலும் வித்தியாசம் தான்.. அஜித் கொடுத்த சர்ப்ரைஸால் திக்கு முக்காடிய விடாமுயற்சி டீம்