தொட்டதெல்லாம் பொன்…! சின்ன மீனை போட்டு தனுஷ் பிடித்த 4 சுறாக்கள்

Kollywood Actor Dhanush produced films: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி கேப்டன் மில்லரில் அதிரடி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் அவர்கள் நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கி பாடல் ஆசிரியர்,பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை ஆகிவிட்டார்.

ஆரம்ப காலங்களில் உருவகேலியால் மிகவும் விமர்சிக்கப்பட்ட தனுஷ் தனது விடாமுயற்சியாலும்  வேறுபட்ட சிந்தனையாலும்  கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறந்து வருகிறார். தயாரிப்பாளராக தனுஷ் வொண்டர் பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்த சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் வசூலில் பல மடங்கு லாபம் சம்பாதித்தது.

எதிர்நீச்சல்: வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் உருவான எதிர்நீச்சல் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் வசூலில் 22 கோடியை தாண்டி சாதனை பண்ணியது. சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், சதீஷ், நந்திதா ஆகியோரின் கூட்டணியில் காமெடி லவ் சப்ஜெக்டுடன் இளைஞர்களுக்கு உந்துதலான சமூக கருத்தையும் எடுத்து வைத்து ஹிட் அடித்தது எதிர்நீச்சல்.

Also Read: தலைவர் பிறந்தநாளில் தனுஷ் போட்ட ட்வீட்.. மாமனாரை விடாமல் தாஜா பண்ணும் மருமகன்

காக்கா முட்டை: தனுஷின் படைப்பில் மணிகண்டனின் இயக்கத்தில் வெளிவந்த காக்கா முட்டை உணவு அரசியலையும், உலகமயமாக்களின்  சிக்கல்களையும் துணிச்சலாக நகைச்சுவையுடன் எடுத்துக் கூறியது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காக்கா முட்டை வசூலில் 16 மடங்கு லாபத்தை சம்பாதித்து பல பிரிவுகளில் விருதுகளையும் அள்ளியது.

விசாரணை: “போலீஸ் நட்பு வம்பு” என்பதை கருவாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரகனி என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த விசாரணை விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றியை சந்தித்தது. 12 கோடியில் எடுக்கப்பட்ட படம் 50 கோடி வசூல் செய்து நான்கு மடங்கு லாபத்தை கொடுத்தது.

பா பாண்டி: இளவயது காதலை தேடச் சென்ற வயதான சிங்கிள் பவர் பாண்டியின் கதை.  தயாரிப்பாளராக இருந்த தனுஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.  படத்தில் பாண்டியன் கேரக்டருக்கு ராஜ்கிரனை பிக் செய்து பாதி வெற்றி பெற்றுவிட்டார். சிறுவயது ராஜ்கிரனாக தனுஷை ஏற்க முடியாவிட்டாலும்  இறுதியில் கதைக்காகவும் தனுஷ்காகவும் ஏற்று படத்தை பெரிய அளவில் ஹிட் அடிக்க வைத்து லாபத்தையும்  கணிசமாக கொடுத்தனர் ரசிகர்கள்.

Also Read:பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போராடும் 4 படங்கள்… ஸ்டைலா கெத்தா லால் சலாம் உடன் போட்டி போடும் கேப்டன் மில்லர்