திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தியேட்டர்ல இந்த படத்தை ஓட்ட முடியாது.. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் ஜெயம் ரவி

Kollywood Actor Jayam Ravi’s next film Siren is set to release directly in OTT: சினிமாவின் பயன் என்பது  திரையரங்குகளை நோக்கியே இருந்தது இதனை உடைத்து எறிந்து வர்த்தக அளவிலும் ரசிகர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்த பெருமை ஓடிடி தளங்களையே சாரும். திரையரங்கில் திரையிடப்படும் படங்கள் நான்கு வாரங்களுக்கு பின்பு ஓடியில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் சில படங்களின் தயாரிப்பாளர்கள் பல்வேறு காரணங்களால் தியேட்டரை விட ஓடிடியில் ரிலீஸ் பண்ணுவதையே பாதுகாப்பாக உணர்கின்றனர்.

போட்டி போட்டாலும் பல பெரிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் உரிமை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மழை வெள்ளம் போன்று இயற்கை கூட சில சமயங்களில் சதி செய்து விடுகிறது. எதற்கு ரிஸ்க் என்று ஜெயம் ரவி மற்றும் அவரது தயாரிப்பாளர்கள் சிலர் அவரது படங்களை  ஓடிடியில் ரிலீஸ் பண்ணுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் கால் பதித்து கிட்டதட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் இளமை துடிப்புடன் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று படமான பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவியின் நடிப்பு அபாரமாக இருந்தது.

Also read: இறைவன் கைவிட்டதால் ஆரம்பித்த இடத்திற்கு சென்ற ஜெயம் ரவி.. சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்த சம்பவம்

தற்போது  அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் தனக்குரிய ஹீரோ இமேஜை கொஞ்சம் தள்ளி வைத்து மிடில் ஏஜுடன் கொஞ்சம் நரைத்த முடியில்  சிறை கைதியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. காவல் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகி பாபு  நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளிவந்து இளைஞர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

பொன்னியின் செல்வனுக்கு முன்னும் பின்னும் ஜெயம் ரவி நடித்த அகிலன் இறைவன் திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை அடையவில்லை. இதனால் ஜெயம் ரவியின் சைரன் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகின்றனர் படக் குழுவினர். ஏற்கனவே ஜெயம் ரவியின் பூமி படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது.

ஜெயம் ரவி நடிக்கும் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரதர் படத்தின் டிஜிட்டல் மற்றும்  சாட்டிலைட் உரிமை மட்டுமே 37 கோடிக்கு விற்பனையாகியுள்ளது எனவும், ஹிந்தி டப்பிங் மற்றும் இசை உரிமை 11 கோடிக்கு  விற்பனையானது.  அதாவது படத்தின் ரிலீஸுக்கு முன்பே வசூலை குவித்து சாதனை புரிந்துள்ளது ஜெயம் ரவியின் பிரதர். ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் தொடரட்டும் ஜெயம் ரவியின் வெற்றி.

Also read: தொடர்ந்து பிளாப் கொடுத்தும் ஜெயம் ரவி குவித்து வைத்துள்ள 5 படங்கள்.. அண்ணன் கைவிட்டாலும் தூக்கி பிடிக்கும் மணிரத்தினம்

Trending News