திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அதிகாரப்பூர்வமாக அஜித் இயக்குனரை கழட்டிவிட்ட கமல்.. மீண்டும் கார்த்திக்கிடம் தஞ்சம்

Kollywood Actor Kamal and director H.Vinoth dropped the movie KH233: பிக்பாஸ், மக்கள் நீதி மையம் மூலமாகவே தலைகாட்டி வந்த கமலஹாசன் அவர்கள் லோகேஷின் விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். சங்கரின் இந்தியன் 2, மணிரத்தினத்தின் தக்லைஃப் என படு பிஸியாகிவிட்டார். மேலும் பட தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

விக்ரம் படத்திற்கு பின் துணிவு வெற்றிப்பட இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்தார். இதற்காக வினோத்துக்கு தனி அறை எடுத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லி கட்டளையிட்டதாக தெரிகிறது.

மர்மயோகி டைட்டில் உட்பட ஆக்சன் திரில்லர் மற்றும் சமூக கருத்து என எல்லாவற்றையும் அதிகமாக எடுத்து வினோத்தும், உலக நாயகனுக்காக அவரிடம் உள்ள வித்தை எல்லாம் இறக்கி வேறுபட்ட கோணத்தில்  தனித்துவமான கதையில் என ஆர்வத்துடன்  ஸ்கிரிப்ட் எழுதி காத்துக் கிடக்க உலகநாயகனோ  ஸ்கிரிப்ட் எழுத சொன்னதையே மறந்து விட்டார் போலும்.

Also Read: ஆண்டவரை அஸ்தமனம் ஆக்கிய பிக் பாஸ்.. சிஷ்யன் வாங்கி கொடுத்த பெயரை மொத்தமாய் காலி செய்த கமல்

பல காலமாக கிடப்பில் உள்ள இந்தியன்2, மணிரத்தினத்தின் தக்லைஃப் மேலும் தெலுங்கில் கல்கி படத்திற்கு பிரபாஸுக்கு வில்லன் என அடுக்கடுக்காக படங்கள் வரிசை கட்டிய நிலையில் தற்போது KH233 யைகைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்தார் கமல். மர்மயோகி காத்திருந்து காணமல் போனார்.

ரசிகர்கள் கமல் மற்றும் ஹச் வினோதின் கூட்டணியில்  உருவாக உள்ள மர்மயோகி  படத்தின் டீசரை எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.  சுதாரித்துக் கொண்ட ஹச் வினோத் தனது வெற்றி படமான “தீரன் அதிகாரம் ஒன்று” இரண்டாம் பாகத்தின் கதையை கார்த்தி இடம் சொல்லி ஒப்புதல் வாங்கி  உள்ளார்.

ஹச் வினோத் மற்றும் கார்த்தியின் கூட்டணியில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவான தீரன் அதிகாரம் ஒன்றின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் இல்லனா கார்த்தி என கலைஞரின் காவியம் தொடர்கிறது.

Also Read: ஆண்டவர நம்பி பிரயோஜனம் இல்ல.. கார்த்தியிடம் சரண்டரான வினோத்

Trending News