ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமலுக்காக தவம் கிடக்கும் அடுத்த 5 இயக்குனர்கள்.. இலவு காத்த கிளி போல மாறிய லோகேஷ்

Kollywood Actor Kamalhaasan line up films and its directors: உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி, தான் மட்டும் செல்லாது தன்னை ரசிப்பவர்களையும் தவறாது இழுத்துச் சென்று அவரது சிந்தனையுடன் ஒன்ற செய்து விடுவார். அதீத சிந்தனையுடன் முன்னேறி செல்லும் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்  தங்களுக்கு தெரிந்த அளவு ரசித்ததை கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

கமல்ஹாசன் நடித்து 2022 வெளியான விக்ரமின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இயக்குனர்களை லாக் செய்து உள்ளார் கமல். இவரது படத்தில் கமிட் ஆகி விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக வேற படம் பண்ண முடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கின்றனர் 5 இயக்குனர்கள்.

மணி ரத்தினம்:  நாயகனுக்கு பிறகு 36 வருடங்கள் கழித்து தக் லைஃபில் ஒன்றாக இணைகின்றனர் மணிரத்தினம் மற்றும் கமல். படத்தின் போஸ்டர் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த நிலையில் ஒரு வழியாக ஜனவரி 24 நாள் ஆன இன்று படப்பிடிப்பு இனிதே ஆரம்பமானது.

ஹச் வினோத்: கடந்த ஆண்டு வெளிவந்த அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்கு பின் ஹச் வினோத்துடன் கைகோர்த்த கமல், கதை ரெடி பண்ண சொல்லி ரூம் போட்டு கொடுத்ததாக தகவல். “கமல் வருவார்! படத்தை இயக்கலாம்” என காத்திருந்தவருக்கு பலத்த ஏமாற்றம் ஏனெனில் இவருக்கு பின் ஒப்பந்தமான மணிரத்தினத்துடன் சூட்டிங் துவங்கி விட்டார் கமல். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளார் ஹச் வினோத்.

Also read: மகா கலைஞன் என நிரூபித்த கமல்.. இறந்த நண்பருக்காக உலகநாயகன் செய்யும் தரமான சம்பவம்

லோகேஷ் கனகராஜ்:  LCU கான்செப்ட்டை உருவாக்கி பல வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், கமலுடன் ஆன விக்ரமின் வெற்றிக்கு பின் விக்ரம் 2 விற்கு பலமான அடித்தளம் போட்டு உள்ளார். படப்பிடிப்பை துவங்கி அடுத்த ஆண்டு நவம்பரில் படத்தை ரிலீஸ் செய்யும் நினைப்புடன் உள்ளார். இவர் நினைக்கலாம் உலக நாயகனும் நினைக்க வேண்டுமே!

அன்பறிவு சகோதரர்கள்: விக்ரம் படத்தில் பணி புரிந்த ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்களிடம் KH 237 படத்தின் ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ண சொல்லி வைத்திருக்கிறாராம் கமல். விக்ரம் 2 ரிலீசுக்கு அப்புறம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.

மகேஷ் நாராயணன்: விக்ரம் படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல், மாலிக் பட புகழ் மகேஷ் நாராயணனின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்தியன் 2 மற்றும் 3, கல்கி என பிசியாக இருந்த கமல் தக்லைப்பில் மணிரத்தினத்துடன் இணைந்த போது மகேஷ் நாராயணன் கூட்டணியில் உள்ள படம் கைவிடப்படுவதாக வதந்தி பரவியது. இதனை மறுத்த மகேஷ் நாராயணன் கொஞ்சம் தாமதமாக படம் துவங்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் எவ்வளவு கொஞ்சம் என்பதை தெளிவாக கூறவில்லை. மகேஷ் நாராயணன் உறுதியுடன் இருக்கும் பட்சத்தில் அந்த “கொஞ்சம்” பல வருடங்கள் கூட ஆகலாம்.

Also read: சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

Trending News