வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அபூர்வ ராகங்கள் முதல் தலைவர்-171 வரை அசுர வளர்ச்சியால் வாங்கிய சம்பளம்.. பரட்டையால் ஏமாற்றப்பட்ட ரஜினி

Kollywood Actor Rajinikanth salary for first and last movie: பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்! வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான்! சத்தியத்தின் பாதை வழி நடப்பான்! மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்!  என கவிஞரின் வரிகளுக்கு உயிரோட்டமாக வாழ்ந்து வருபவர் தலைவரே. தமிழ்நாட்டு மக்களால் தலைவர் என உரிமையாக முழங்கப்பட்ட மனிதர் சூப்பர் ஸ்டாராக மட்டும்தான் இருக்க முடியும்.

கே பாலச்சந்தரால் அரிதாரம் பூசப்பட்டு அபூர்வராகங்களில் அறிமுகமான சிவாஜி ராவ் என்கின்ற ரஜினிகாந்த் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை ஆவார். இன்றளவு பல நூறு கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கும் ரஜினியின் ஆரம்ப காலமோ சோகங்கள் நிறைந்தது. நடித்துக் கொடுத்த படத்தின் சம்பளத்திற்காக நன்றாக அலையவிட்டு இருக்கிறார்கள். காரில் கூட்டி போய் இறக்கி விட்டிருக்கிறார்கள் ஏமாற்றுக்காரர்கள்.

கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினி அவர்கள் பிழைப்புக்காக மூட்டை தூக்குபவராகவும், தச்சு பட்டறையிலும் வேலை பார்த்து உள்ளார். முதன் முதலில் பத்திரிக்கையில் பிழை திருத்துபவர் ஆக வேலை பார்த்தபோது அவர் வாங்கிய சம்பளம் 60 ரூபாய். அவருக்கு முதல் அடையாளமான கண்டக்டராக பணிபுரிந்த போது அவர் வாங்கிய ஊதியமோ 400 ரூபாய்.

Also read: சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு ரஜினி தலையெடுத்த படம்.. 90களில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆன தலைவர்

தலைவர் அறிமுகமான அபூர்வ ராகங்களில் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம்  5000ரூபாய்.  படத்திற்கு படம் மார்க்கெட்டை உயர்த்தும் ஹீரோக்கள் நிறைந்த உலகில், பின்நாளில்  இவர் நடித்த 16 வயதினிலே படத்தின் பரட்டைக்கு 3000 ரூபாய் சம்பளம் பேசி 2500 ரூபாய் கொடுத்து அவரை குறைத்து மதிப்பிட்டு இருந்தனர்.

சினிமாவில் தனக்கு நேர்ந்த அவமானங்களால் விழித்துக் கொண்ட தலைவர், சிங்கம் ஒன்று புறப்பட்டதே!அதுக்கு காலம் பொறந்திருச்சு! என்பது போல் வீறு கொண்டு எழுந்தார். விரல்களின் வழியே வித்தை செய்து, முந்திய முடியை பின்னே தூக்கி எறிந்து படிப்படியாக தனது நிலையை ஸ்டாரிலிருந்து சூப்பர் ஸ்டாராக உயர்த்தினார் ரஜினி.

சினிமாவுக்கு முன் குருச்சேத்திரம் நாடகத்தில் துரியோதனன் ஆக நடித்தவர் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் கர்ணன் பாத்திரத்தில் சூர்யாவாக களமிறங்கினார் முதன் முறையாக இப்படத்தில் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பது அப்போதைக்கு ஆச்சரியமான ஒன்று.

ஆரம்பத்தில் பணத்திற்காக கஷ்டப்பட்ட ரஜினி, இன்று தலைவர் 171 படத்திற்காக அவர் வாங்கும் சம்பளமோ கிட்டத்தட்ட 250 கோடி. பணத்தையும் ஆடம்பரத்தையும் ஒரு பொருட்டாக மதிக்காத அவர், இன்றளவும் ஆன்மீக யாத்திரைக்கு செல்லும் போது பாமரன்னோடு பாமரனாக பொதுவெளியில் அமர்வது, சாப்பிடுவது என தலைக்கணமற்றவராக இருக்கிறார் தலைவர். தலைவன் வழி தனி வழிதான்.

Also read: நடித்த 7 படங்களில் ஆறு சூப்பர் ஹிட்.. ரஜினிக்கு மட்டும் அட்டர் ஃப்ளாப் கொடுத்த ஹீரோயின்

Trending News