திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

2015 முதல் மிக்ஜாம் வரை சிவகார்த்திகேயன் வழங்கிய 5 நிதி உதவி.. அப்ப சிம்புல்லாம் ஒண்ணுமே இல்லையா?

Kollywood Actor SivaKarthikeyan contribute money to Tamilnadu Government: தமிழகம் தவறும் சமயம் எல்லாம் தவறாது  என்ட்ரி கொடுப்பவர் சிவகார்த்திகேயன். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் இது யாருக்கு சரியோ இல்லையோ சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஒன்று. மிமிக்கிரியின் மூலம் தனது வாழ்வின் அடுத்தடுத்த உயரங்களை எட்டிப் பிடிக்க முயலும் சிவகார்த்திகேயனை தடுக்கும் தடை கற்களோ ஏராளம்.

தடை கற்களை படிக்கட்டுகள் ஆக்கி வரும் சிவகார்த்திகேயன் சினிமாவை தாண்டி தேவை ஏற்படும் போதெல்லாம் தமிழக மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். நெட்டிசன்கள் இவரின் செயல்களுக்கு அது இது என்று விமர்சிக்கும் போதும், விமர்சனங்களை தாண்டி  எந்த ஒரு கடுமையான சூழலிலும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவார் சிவகார்த்திகேயன்.

மிக்ஜாம் புயலின் சேதங்களை சரி செய்யும் பொருட்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து பத்து லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளது பாராட்டிற்குரியது.

Also read: ரஜினி சினிமாவில் வளர்த்து விட ஆசைப்பட்ட 5 நடிகர்கள்.. சிஷ்யனாகவே மாறிய சிவகார்த்திகேயன்

ஆம் 2015 ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு 5 லட்சமும் கஜா புயலின் தீவிரத்தில் கட்டுண்ட போது பத்து லட்சமும் தமிழக அரசுக்கு கொடுத்து உதவினார் சிவா. தமிழக மக்களுக்கு பாதிப்பு  ஏற்படும் போதெல்லாம் தவறாமல் உதவிக்கரம்  நீட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் நம் சிவகார்த்திகேயன்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவே வீட்டுக்குள் முடங்கி போனது. மக்கள் பலரும் வியாபாரத்தில் நொடிந்து போயினர். பலரது வாழ்க்கையும் புரட்டி போட்ட கொரானாவின் கோரப் பிடியிலிருந்து மீள சிவகார்த்திகேயன் பெப்சி யூனியனுக்கு 10 லட்சம் வழங்கினார். உச்சத்தை தொட்ட கோவிட் இன் 2வது அலையில்  மக்கள் பலரும் கொத்துக்கொத்தாக மாண்ட நிலையில் மருத்துவ உதவிக்காக மக்கள் பரிதவித்த போது  திணறிய அரசாங்கத்திற்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்த நிலையில் சிவகார்த்திகேயன் 25 லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.

இந்த நல்ல மனசுக்கு எங்கள் அண்ணன் நல்லா இருக்க வேண்டும் என்று அவரின் உடன் பிறவா ரசிகர்கள் கொடி பிடிக்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் தான் ஒரு பச்சை தமிழன் என்று கூறி வரும் சிம்பு எப்படிப்பட்ட உதவி செய்து வருகிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை. ஒருவேளை அஜித் மாதிரி தெரியாமல் செய்கிறாரோ என்பது புரியாத புதிராக உள்ளது.

Also read: வெள்ள நிவாரண நிதிக்கு ஸ்டாலினிடம் கொட்டிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஹீரோக்கள் முதலாளியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

Trending News