ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

தனுசுக்கே தண்ணி காட்ட வரும் சிவகார்த்திகேயன்.. கேப்டனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

Kollywood Actor sivakarthikeyan’s ayalaan movie will release in pongal 2024: “குழந்தைகளுக்கான படம்! உங்களுக்குள் இருக்கும் குழந்தைக்கான படம்!” என அயலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் மக்களுக்கு கொக்கி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அயலான் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். 2018 இல் தொடங்கிய அயலான் ஐந்து வருடங்களாக இடையிடையே பல இடைவேளை எடுத்து ரிலீசுக்கு போராடி வருகிறது.

நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமாரின் படமாகும். சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்தி சிங், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபரில் படத்திற்கான டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

ஏலியன் ஜானர் வித் சயின்ஸ் பிக்சன் படமே அயலான். டீசரில் நம் உலகிற்கு ஏதோ ஆபத்து நடந்து கொண்டிருக்கிறது. அது வெளியே இருந்து அல்ல. இந்த உலகிலேயே இருக்கிறது. நம் உலகை காக்க ஏதோ ஒரு எக்ஸ்ட்ராடினரி பவர் கொண்ட ஏலியன் வரப்போகிறது. சாதாரணமாக தோன்றும் சிவகார்த்திகேயன் ஏலியனுடன் இணைந்து அபார சக்தி கொண்டவனாக, எதிரியை அழிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அமைந்துள்ளது.

Also read: 2015 முதல் மிக்ஜாம் வரை சிவகார்த்திகேயன் வழங்கிய 5 நிதி உதவி.. அப்ப சிம்புல்லாம் ஒண்ணுமே இல்லையா?

ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது வேறு யாரும் அல்ல நடிகர் சித்தார்த் தான். இந்திய சினிமாக்களிலேயே  அதிகமான 4500 வி எஃப் எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றது இந்த படத்தில் தான். இதற்காகவே படத்தின் பொருட்செலவு அதிகமாகியுள்ளது என தகவல். ஏலியன் வரும் ஒவ்வொரு சீனையும் மூன்று தடவை சூட் பண்ணினார்களாம்.

படத்திற்காக  அனைவரும் ரொம்ப மெனக்கெடுத்து பண்ணினார்களாம் இதில் பட்ஜெட் பிராப்ளம் வேறு. படத்தின் உருவாக்கத்தை விரைவுப்படுத்தும் பொருட்டு சிவகார்த்திகேயன் எந்த சம்பளமும் முன்பணமாக வாங்காமல் ஒத்துக் கொண்டு நடித்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்று. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் உலக அளவில் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட போகும் படம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

பொங்கலுக்கு அயலான் போல் தனுஷின் கேப்டன் மில்லரும் ரிலீஸ் ஆகப்போவது  அயலான் படக்குழுவினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து போராடிவரும் படம், வசூல் ரீதியாக பாதிப்பை அடைந்து விடுமோ என்ற நோக்கில் ரிலீஸ் தேதி மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகின்றனர். ஆனால்  சிவகார்த்திகேயனோ கான்ஃபிடன்டாக இந்த அயலான் பொங்கலன்று வருவான்! உங்களை கவர்வான்! வெல்வான்! என்று  முடித்து இருந்தார்.

Also read: ரஜினி சினிமாவில் வளர்த்து விட ஆசைப்பட்ட 5 நடிகர்கள்.. சிஷ்யனாகவே மாறிய சிவகார்த்திகேயன்

Trending News