செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சம்பளத்தை உயர்த்தி புது பார்முலா போட்ட சூப்பர் ஸ்டார்.. கெத்து குறையாமல் ரஜினி ஆடும் பேயாட்டம்

Kollywood Actor Super star Rajini hike his salary for his next film: “என் வழி  தனி வழி” என்று எப்போதுமே தனக்கென்று புதிதாக ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணப்பட்டு வெற்றியை எளிதாக அடையும் சூத்திரத்தை உருவாக்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். “வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகல” என்று கூறும் அளவுக்கு இளம் தலைமுறைக்கு டஃப் கொடுத்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அப்படி இருந்த ரஜினிக்கு இடையில் ஏற்பட்ட சிறு சறுக்கலுக்குப் பின் ரஜினிகாந்த்திற்கு வயதாகி விட்டது இனி முன்பு போல் அவரது படங்கள் ஓடாது என்று பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. கருத்துகளை மெய்ப்பிக்கும் பொருட்டு வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் யாவும் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனது.

இதனால்  ரஜினியின் சம்பளமும் குறைக்கப்பட்டது என்ற தகவல் பரவி  வந்தது. அடுத்ததாக பீஸ்ட்டின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பின் துணிச்சலுடன் நெல்சன் உடன் கை கோர்த்தார் சூப்பர் ஸ்டார். நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் இருவரும் கம்பேக் கொடுக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டனர்.

Also read: ரஜினியை காப்பி அடித்து அசிங்கப்பட்ட தனுஷ்.. புலியை பார்த்து சூடு போட்டு மாட்டிக்கொண்ட அவலம்

ஒரு வழியாக இருவரின் கடின உழைப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் தாறுமாறாக ஹிட் அடித்தது. படத்தின் வசூலோ 650 கோடியை தாண்டியது. பாடல் உரிமம், டிஜிட்டல் உரிமம் என ஜெயிலரின் வெற்றி கணக்கிட முடியாத அளவு உச்சத்தில் எகிறியது.

ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சம்பளம் 110 கோடி போக படத்திற்கான பிராஃபிட் 100 கோடியும் சேர்த்து மொத்தமாக 210 கோடி வாங்கி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை தட்டி சென்றார் சூப்பர் ஸ்டார்.

இப்போது புது சூத்திரமாக எந்த ப்ரொடியூசர் வந்தாலும் முன்னணி நடிகர்களின் சேலரியை கேட்டு வைத்து விட்டு அவர்களை விட கூடுதலாக வசூலிக்க முடிவு எடுத்து உள்ளாராம் குறிப்பாக விஜய்க்கு 240 கோடி சம்பளம் என்றால் கூடுதலாக பத்து வைத்து 250 கோடி கேட்டு தயாரிப்பாளரை வாயடைக்க வைக்கிறார் என்று வதந்தி பரவி வருகிறது.

வேட்டையன் படத்தில் பிசியாக இருக்கும் தலைவர். தனது அடுத்த படமான தலைவர் 171க்கு லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். மேற்கண்ட தகவல் உறுதியாகும் பட்சத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டணியில் உருவாக உள்ள தலைவர் 171க்கு கண்டிப்பாக தனது சம்பளத்தை 250 கோடியிலிருந்து 270 கோடி வரை உயர்த்தி ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை எட்டப் போகிறார் சூப்பர் ஸ்டார் என்பது மட்டும் உறுதி.

Also read: ஒற்றை பாடல் வரியால் ரஜினியை சீண்டிய சத்யராஜ்.. 38 ஆண்டுகள் ஆகியும் முணுமுணுக்க வைக்கும் பாடல்

Trending News