திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அவன் ஊரை காப்பாத்த அவன் தானங்க போவான்.. இயக்குனரை தாங்கி பிடித்த வடிவேலு

Kollywood Actor Vadivel supports Director Mari selvaraj: வடகிழக்கு பருவமழை தமிழகத்தை மிக்ஸாம் புயலுக்கு முன் பின் என இரு வேறு விதமாக புரட்டி போட்டது. ஆரம்பத்தில் வட மாவட்டங்களை ஆட்டி எடுத்த புயல்  கொஞ்சம் இடைவேளை எடுத்து தென் மாவட்டங்களில் பேயாய் மாறி கன மழையால் பல கிராமங்களை தத்தளிக்க வைத்தது.

சென்னை புயலால் தத்தளித்த போது திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து  தலைநகரை கைதூக்கி விட்டனர். தங்களை யாரும் காப்பாற்ற வரமாட்டார்களா என்று கதறும் தென் மாவட்டங்களுக்கு பதில் கூறும் விதமாக களத்தில் இறங்கினார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.

மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வெள்ளம் கரைபுரண்டு ஓடி பல கிராமங்களை சூழ்ந்தது கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் வெளிவர முடியாமல் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் மாட்டிக்கொள்ள மீட்பு குழுவினருடன் அங்கு விரைந்த மாரி செல்வராஜ்  மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

Also read: கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மாரி செல்வராஜ்.. மக்களை மீட்டெடுத்த மாமன்னன் வீடியோ

தான் ஒருவனால் மட்டும் முடியாது என்று நினைத்தவர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அவரது நண்பரான உதயநிதியை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்து வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டார். இதனால் மக்கள் மீட்கப்படுவது துரிதப்படுத்தப்பட்டது.

இயக்குனரின் இந்த செயலை கண்டு ஆற்றாமை பொறுக்காத சிலர் உதயநிதியுடன் ஆய்வு பணிகளில் ஈடுபட இவர் யார்? என்று விமர்சித்தனர். இயக்குனருக்கு இங்க என்ன வேலை என்று கடும் சொல்லால் தாக்கினர்.  நான் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உதயநிதி இங்கு வந்தார் என்று பதில் அளித்தார்  மாரி செல்வராஜ்.

இந்நிகழ்வை விமர்சித்த நடிகர் வடிவேலு அவர்கள் இயக்குனருக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம், அது அவன் ஊருடா! அவன் ஊருக்கு அவன் போகக்கூடாதா? தப்பு தப்பா பேசுறாங்க.  நானும் கோபத்தை அடக்கி பாக்குறேன் என்னால முடியல என்று மாரி செல்வராஜிற்காக  பொங்கி எழுந்தார் வைகை புயல்  வடிவேல்.

Also read: அஜித்துடன் சண்டை முத்தியதால் இப்ப வர ஒன்று சேராத 4 பிரபலங்கள்.. 21 வருடங்களாக ஓடாத வடிவேலு

Trending News