வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பண்றதெல்லாம் காசுக்காக, அப்புறம் சிஎம் போஸ்டுக்கு ஆசைப்பட்டால் எப்படி விஜய்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Kollywood Actor Vijay’s movie title issue: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவர்கள் தான் நடிக்கும் படம் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான டைட்டிலை வைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து விடுவார்.

இவருக்கு மிருகத்தின் பெயர் உள்ள டைட்டில்கள் குருவி, சுறா, புலி போன்றவை கை கொடுக்காமல் போகவே தொடர்ந்து தனது படங்களுக்கு ஆங்கில டைட்டில் வைத்து வசூல் ரீதியாக தெறிக்க விட்டு வருகிறார் தளபதி.

பிகில்: அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய், நேரடியாக அரசியலைப் பற்றி சொல்லாவிட்டாலும் மறைமுகமாக தாக்கி, பிகிலை பட்டையை கிளப்பி இருந்தார் விஜய்.

மாஸ்டர்: விஜய்யின் இப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்படும் வாத்தியாரையே  நினைவு படுத்தியது. இந்த வாத்தியார் “சின்னப் பயலே சேதி கேளடா” என்று சொன்ன எம்ஜிஆரை தான் குறிப்பிடுகிறது. இவர் இந்த காலத்திற்கு தகுந்த மாதிரி தத்துவங்கள் பாடி அராஜகமான சீரார்களை அரவணைத்து அன்புடன் திருத்திய கதையே மாஸ்டர்.

பீஸ்ட்: விஜய்யின் 65 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் உருவாகிய விஜய்யின் பீஸ்ட் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் சினிமா ஆர்வலர்கள் பலரால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. சில லாஜிக்குகள் மிஸ் ஆனதால் பட குழுவினரின் கடின உழைப்பு வெளியே தெரியாமல் போனது

Also read: அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.. அவரை பார்த்து பயந்து தான் கன்ஃபார்ம் ஆன தளபதி-69

லியோ: ஏனப்பா விஜய் படத்தின் டைட்டிலுக்கு லியோ என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டதற்கு வசனகர்த்தா ரத்தினகுமார் அவர்கள், விஜய்யின் படங்கள் ஃபான் இந்தியா மூவியாக உருவாகி வருகிறது அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் லியோ என்று சுருக்கமாக வைத்திருக்கிறோம் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். “லி” என்று வைக்காமல் யோவையும் சேர்த்தார்களே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான்.

GOAT: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ஜாலியாக நடிக்கும் விஜய் 68 தலைப்பை  விரைவில் வெளியிட உள்ளனர். இதுவும் விஜய்யின் ஃபான் இந்தியா மூவியாக உருவாக உள்ளதால் ஆங்கில தலைப்பை வைக்கும் நோக்கோடு என்ற Greatest One Across Times’ சுருக்கமாக GOAT என்று முடிவு செய்துள்ளனர். மிருகம்னாலே தளபதிக்கு அலர்ஜியே பார்த்து வைங்கப்பா டைட்டிலை.

Also read: விஜய் தம்பி வளர கூடாது என திட்டம் தீட்டும் விஷ்ணு விஷால்.. வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா!

Trending News