வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோடி கோடியா வைத்திருந்தாலும் லட்சத்தால் கீழே விழுந்த அம்பிகா, ராதா.. எல்லாம் தெரிந்த பயில்வான் கூறும் சீக்ரெட்

Kollywood Actresses Ambika and radha ‘s studios banned for closed tv serials shooting: 90களில் தமிழ் சினிமாவை  மற்றும் ரசிகர்களை ஆட்டிப்படைத்த ஸ்டார் சகோதரிகள் அம்பிகாவும் ராதாவும். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் கோலுன்றிய இந்நடிகைகள் சினிமாவின் மூலம் சேர்த்த சொத்துக்கள் என பல நூறு கோடிகளில் உள்ளது.

சமீபத்தில் ராதாவின் மகள் கார்த்திகாவின் திருமணம் தடல்புடலாக நடைபெற்றது. மணமகளுக்கு உச்சி முதல் பாதம் வரை தங்கத்திலேயே அலங்கரித்து இருந்தார் ராதா. சினிமா பிரபலங்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

சினிமா துறையில் கொடி கட்டி பறந்த அம்பிகா மற்றும் ராதாவிற்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏராளம். அதிலும் சென்னையில் MGR கிப்ட் ஆக கொடுத்த நிலத்தில் 25 ஏக்கரில் ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்று நடத்தி வருகின்றனர் இவர்கள். இந்த ஸ்டூடியோவில் குறைந்த வாடகையில் சின்னத்திரை சீரியல்களும் குறைந்த பட்ஜெட் படங்களும் தங்கள் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Also Read: மகளை தங்கத்தால் இழைத்து அழகு பார்த்த ராதா.. சென்னை முதல் திண்டுக்கல் வரை உள்ள சொத்துக்கள்

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த தயாரிப்பாளர் பிரசாத் என்பவர் அம்பிகா மற்றும் ராதாவின் தம்பி அர்ஜுனுக்கு 25 லட்சம் கடன் கொடுத்து 19 லட்சம் வசூலித்து விட்டு கடன் தொகையாக அர்ஜுன் 6 லட்சம் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காண பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார் தயாரிப்பாளர் பிரசாத். சங்கம் குறுக்கிட்டு ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த மறைமுகமாக தடை விதித்து உள்ளனர். இதனால் அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு நடத்தி வந்த சின்னத்திரை சீரியல்கள் அங்கு தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

கோடீஸ்வர சகோதரிகள் தம்பிக்கு உதவ கூடாதா என்று ஒரு பக்கமும், கடன் பிரச்சனைக்காக  ஸ்டூடியோ மூடப்பட்டது தவறு என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 400 கோடி மதிப்புள்ள இந்த ஸ்டுடியோ வெறும் 6 லட்சம் கடனால்  மூடப்பட்ட இந்த பிரச்சனையை முன்வைத்து சினிமா விமர்சகர் பயில்வான், ஸ்டார் சகோதரிகள் சொத்து சேர்த்த விவகாரத்தையும் சகோதரிகளின் ஸ்டுடியோ கைநழுவி போகும் கதையையும் பகிர்ந்து உள்ளார்.

Also Read: 400 கோடி நிலத்தை கிப்டாக கொடுத்த எம்ஜிஆர்.. அதை ஸ்டூடியோவாக மாற்றிய நடிகை

Trending News