புதன்கிழமை, ஜனவரி 1, 2025

கோடீஸ்வர பெண்களை திருமணம் செய்த 5 பிரபலங்கள்…மார்க்கெட் இல்லன்னா கூட பொழச்சு பாண்டா இந்த விஷ்ணு

Kollywood celebrities and their life partners: பொருளுக்கும் குறைவில்லாமல் புகழுக்கும் குறைவில்லாமல் வாழும் வாழ்வே வாழ்வு என கணக்கு போட்டு வாழ்கின்றனர் இன்றைய தலைமுறையினர். வாழ்க்கை ஒருமுறை நமக்காக வாழ்வோம் என்று தத்துவமழை பொழியும் அவர்கள்  திருமணத்தையும்  ஆதாய நோக்கத்திலேயே அணுகுகின்றனர்.

இன்றைய நடிகர்கள் சிலர் வாய்ப்பு இருக்கும் வரை சினிமாவில் ஒரு ரவுண்டு கலக்கி விட்டு பின் கோடீஸ்வர பெண்களை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர். அப்படியான நடிகர்களின் வாழ்க்கையில் அன்பான காதல் மனைவியுடன் காசுக்கும் பஞ்சமில்லை எனலாம்.

ஆர்யா-சாயிஷா: கஜினிகாந்த் படத்தின் மூலம்  திரையில் இணைந்த இந்த ஜோடி,  பெற்றோர் சம்மதத்துடன் வாழ்க்கையிலும் இணைந்தது. சாயிஷாவின் பெற்றோர் பாலிவுட் நடிகர்கள் ஆவார்கள். மேலும் இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தியாவார். தற்போது இவர்களுக்கு ஆரியானா என்ற மகள் உள்ளார். எப்போதும் மகளின் நலம் பேணி வரும் ஆர்யா, சினிமாவில் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார்.

துல்கர் சல்மான்- அமல் சூபியா: தமிழ், மலையாளம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் துல்கர் சென்னையின் மல்டி மில்லினியர்களில்  ஒருவரான செய்யது நிஜாமுதீனின் மகள் அமல் சூபியாவை திருமணம் செய்து இன்று தனது 12வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர் . மாதம் கோடிகளில் சம்பாதிக்கும் இவரது மனைவி சிறந்த ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்டீரியர் டிசைனர் ஆவார்.

Also Read: சொத்து பிரச்சனையால் விவாகரத்து செய்த நடிகரின் வாரிசு.. 500 கோடியை ஒரே அமுக்காய் அமுக்கிய இயக்குனர்

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா: நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி 2020ல் காதலை உறுதிப்படுத்தி 2022 இல் திருமண பந்தத்தில் இணைந்தனர். ஜுவாலா கட்டா இந்திய  பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆவார். இருவரும் முதல் மணமுறிவுக்கு பின் இரண்டாவதாக தங்களின் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து உள்ளனர். விஷ்ணுவின் மாமனாரோ ஆந்திராவின் பிரபல தொழில் அதிபர் ஆவார்.

அருண்விஜய்-ஆர்த்தி மோகன்:  என்னை அறிந்தால், தடம் போன்ற படங்களில் தெறிக்க விட்ட அருண் விஜய், பிரபல தொழிலதிபரின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்தார். அருண் விஜய்யின் சில படங்களை அவரது மாமனாரே தயாரித்ததாக தகவல். அருண் விஜய் ஆர்த்தி தம்பதிக்கு பூர்வி  என்ற மகளும் மற்றும் ஆர்நவ் விஜய்  என்ற மகனும் உள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யா: சமீபத்தில் மார்க் ஆண்டனி புகழ், இயக்குனர் ஆதி தவிச்சந்திரன் மற்றும்  நடிகர்பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் தடபுடலாக நடந்தேறியது.  பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். பிரபு அவரின் மகளுக்காக கேட்காமலேயே கல்யாண சீர்வரிசை கொடுத்து மாப்பிள்ளையை திக்கு முக்காட வைத்துள்ளார்..

Also Read:2023 அதிகமா எதிர்பார்க்கப்பட்டு புஸ்ன்னு போன 5 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு கொக்கி போடும் கோமாளி

Trending News