புதன்கிழமை, ஜனவரி 1, 2025

முன்னணி இயக்குனர்கள் ஆனாலும் நோ சொல்லும் யோகி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

Kollywood Comedian Yogi Babu upcoming films: “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை! வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” என்பதை பொய்யாக்கி புத்தியுடன் பிழைத்து வெற்றியாளராக, இந்திய சினிமாவின் காமெடியனாக ஆகவும் நடிகனாகவும் கட்டம் கட்டிக் கொண்டிருக்கும் யோகி பாபுவின் கைவசம் இருக்கும் படங்களை பார்க்கலாம்.

இந்த கஞ்சக்காரனான கடவுள் அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பதில்லை. நிறைவில்லாத ஒன்றை மனிதர்களுடன் அனுப்பி வைத்து விடுவார். சிறுவயதிலிருந்தே கேலிக்குரிய தன் தோற்றத்தை நிறையென மாற்றி புகழின் உச்சியை தொட்டிருக்கிறார் இந்த பாபு.

விஜய் டிவி தொலைக்காட்சியின் லொள்ளு சபாவின் மூலம் தனது கலை உலக வாழ்வை தொடங்கிய பாபு அமீரின் யோகியில் நடித்ததன் மூலம் யோகி பாபு ஆனார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் போட்டி போட்டு படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு.

Also read: ஷாருக்கான் வாலை விடாமல் பிடித்துக் கொள்ளும் நடிகர்.. மூன்று மடங்கு சம்பளத்துக்கு அட்லீயை வைத்து விட்ட தூது

இவரது உருவம், நடை, முக பாவனை, லொள்ளு பேச்சு என அத்தனையையும் பிளஸ் ஆக்கிக் கொண்டு  அனைவரையும் தன்வசம் இழுத்து விடுவதில் கெட்டிக்காரர். சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் உருவ கேலிக்கு எதிராக பேசி அனைவரையும் சிந்திக்க வைத்த இந்த சிகாமணி பாலிவுட் ஆக்டர் ஷாருக்கானின் விருப்பத்தேர்வு ஆவார்.

சென்னை எக்ஸ்பிரஸ் ஆரம்பித்த இவரின் நட்பை  கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷாருக்கான் ஜவானிலும் காமெடிக்கு இவரை முன்மொழிந்தார். ஷாருக்கான் நம்மிடம் பேச மாட்டாரா என திரை பிரபலங்கள் பலரும் ஏங்க, பட விழா ஒன்றில் யோகிபாபுவை வரவேற்று கட்டியணைத்து நெகிழ செய்துவிட்டார் ஷாருக்கான்.

நடிகராகவும் காமெடியனாகவும் “போட்,  மிஸ் மேஜிக், மெடிக்கல் மிராக்கிள், பெரிய ஆண்டவர், ஆலம்பனா, சைத்தான் கா பச்சா,வீரப்பன் கஜானா என கைவசம் 26 படங்களுக்கு மேல் வைத்திருக்கும் இந்த காமெடி குவிண்டால் யோகி பாபு 2026 வரை பிசியாக உள்ளாராம். ஷாருக்கானின் லயன் படத்திற்காக காமெடியனாக  மூன்று மடங்கு சம்பளம் கேட்டாலும் கொடுத்து இவரை பிக்ஸ் செய்ய அட்லீ யிடம் தூது  அனுப்பியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.

Also read:யோகி பாபு இடத்தை பிடித்த விஜய்யின் செல்லபிள்ளை.. இவர் இல்லனா தளபதி நடிக்க மாட்டாராம்

Trending News