வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இவன் உள்ளூர் ஓணான் எப்ப வேணா அடிச்சுக்கலாம்.. எப்போதும் சுந்தர்சி கூடவே வைத்திருக்கும் அடியாள்

Kollywood Director Sundar C’s favourite Co-stars: இயக்குனர்கள் கதைக்கு தகுந்தபடி நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான வசனங்களை தயார் செய்வார்கள். ஆனால் ஒருவர் மட்டும் சற்று உல்டாவாக, தான் தேர்ந்தெடுத்த நடிகர்களுக்கு ஏற்ப கேரக்டர்களை உருவாக்கி அதை காமெடி ட்ராக்காக மாற்றி கதையை வெற்றி பெற செய்வார் அவரே  சுந்தர்சி.

குறிப்பிட்ட அளவு நடிகர்களை வைத்து மட்டுமே படம் எடுக்க திண்டாடி வரும் நிலையில் எப்போதும் சுந்தர்சியின் படத்தில் கல்யாண கும்பலாக பலரும்  கச்சைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். படத்தையும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு காமெடியில் தூள் கிளப்புவதில்  திறமையானவர் நமது சுந்தர் சி. இவர் விட்டுக் கொடுக்காத அவருக்கு ஃபேவரைட் ஆன நடிகர்கள் சிலர்.

மணிவண்ணன்: குருவை மறக்காத சிஷ்யனாக இருந்த சுந்தர் சி மணிவண்ணனுடன் பணிபுரிந்த காலங்களில் அவருடன் இருந்த புரிதல்கள் பற்றி பல நிகழ்வுகளில் பகிர்ந்து உள்ளார். ஆரம்ப காலங்களில் உள்ள தனது படங்களில் மணிவண்ணனுக்கும் ஒரு ரோல் பிக் செய்து விடுவது வழக்கமாகக் கொண்டிருந்தார். உள்ளத்தை அள்ளித்தாவில் மணிவண்ணனுக்கு டபுள்ரோல் வைத்து காமெடியில் ஸ்கோர் செய்து இருந்தார் சுந்தர் சி.

கோவை சரளா: மனோரமா ஆச்சிக்குப் பிறகு காமெடியில் கலக்கியவர் கோவை சரளா. இவர் சுந்தர்சியின் கூட்டணியில் அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். அரண்மனை 3 இல் நடிக்கவில்லை ஆதலால் அப்படம் முந்திய படங்களை போன்று ஹிட் அடிக்க வில்லை என்று கருதிய சுந்தர் சி அரண்மனை 4 இல்  எப்படியாவது கோவை சரளாவை  ஒரு சீனுக்காவது நடித்து வைத்துவிட வேண்டும் என்று கூறி உள்ளாராம்.

Also read: குஷ்பூ சுந்தர் சி இன் பகிரை கிளப்பும் சொத்து மதிப்பு.. அரண்மனை10 வரை தயாரிப்பதற்கு குவிந்த காசு

விஸ்வநாதன்: சுந்தர்சி மற்றும் குஷ்புவின் காதலை முதலில் கண்டுபிடித்துக் கூறிய அடியாள் இந்த விச்சு என்கிற விசுவநாதன் தான். ஆம் இவர் சுந்தர்சியின் பெரும்பாலான படங்களில் அடியாள் வேடத்திலேயே மற்றும் வில்லன் நடிகராகவே நடித்து பிரபலமானவர். சுந்தர் சி இயக்கிய இரண்டு படங்களைத் தவிர மற்ற அனைத்து படங்களிலும் நடித்தவர் விஸ்வநாதன். சுந்தர் சி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை வாழ்க்கையை கொடுத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் விச்சு.

மனோபாலா: இவரை இயக்குனராக தெரிந்ததை விட காமெடி நடிகராக மக்கள் ரசித்தது தான் அதிகம். நான் ஒரு நடிகனா அடுத்த கட்டத்துக்கு போக காரணமாக இருந்தவர் சுந்தர்சி என்று மனோபாலாவே கூறியிருக்கிறார். மனோபாலா, சந்தானம் கூட்டணியில் சுந்தர்சியின் படங்களில் உள்ள வசனங்களை ரசிகர்கள் என்றும் மறப்பதில்லை ஆம்பள படத்தில் பீடியில் இருந்து புகை வரும்! புகைக்குள்ள இருந்து பீடி வருது! என்றும், கலகலப்பு இல் “இவன் உள்ளூர் ஓணான் ,எப்ப வேணாலும் அடிக்கலாம்” போன்ற வசனங்கள் கேட்டு ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர்.

பூனம் பஜ்வா: ஆரம்ப காலங்களில் சுந்தர் சிக்கு பிடித்த நடிகை ஆக குஷ்பூ, ரம்பா இருந்தனர். தனது பெரும்பாலான படங்களில் ரம்பாவை புக் செய்து உள்ளார் சுந்தர் சி. இவர் நடிகரான உடன் அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்காவில் பூனம் பஜ்வாவுடன் ஜோடி சேர்ந்தார் சுந்தர் சி. இவரும் சுந்தர் சிக்கு பிடித்த நாயகி ஆகிவிட்டார் தனது அடுத்தடுத்த படங்களில் இவருக்கும் ரோல் கொடுக்க முடிவு பண்ணிவிட்டார் சுந்தர் சி.

வி டி வி கணேஷ்:  கனமான குரலுக்கு சொந்தக்காரர் ஆன இவர் சுந்தர்சியுடன் இணைந்து இயல்பான கவுண்டர்களுடன் காமெடியில் கலக்கி வருகிறார். கலகலப்பு 2 இல் காமெடியான தந்தையாக வந்தவர் முத்தினகத்திரிக்காய் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். மேலும் இருட்டு படத்தில் சுந்தர்சி மற்றும் வி டி வி கணேஷ் கம்போ வொர்க் அவுட் ஆனதை அடுத்து இருட்டு 2 பாகத்திலும் இவர்கள் இணையலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Also read: போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்! ரஜினியின் திரை வாழ்க்கையில் தோள் கொடுத்த தூக்கிவிட்ட 6 இயக்குனர்கள்

Trending News