புதன்கிழமை, ஜனவரி 15, 2025

5 படம் கையில் வைத்துக்கொண்டு சீரியலில் களம் இறங்கும் வாரிசு நடிகர்.. தீரன் சின்னமலையாக புது அவதாரம்.!

தமிழ்சினிமாவில் ஒரு சமயத்தில் உச்சத்தில் இருந்த நடிகர் தான் சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. ஏராளமான படங்களில் நடித்துள்ள சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக கருதப்படுகிறார். இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால் இவரது படங்களில் இடம்பெறும் காமெடிகளில் கோயம்புத்தூர் குசும்பு நன்றாகவே தெரியும்.

80 மற்றும் 90களில் நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிய சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் சத்யராஜின் நடிப்பு பாராட்டை பெற்றது. அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக சத்யராஜ் பொருந்தி இருந்ததாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இருக்கும் சத்யராஜ் தனது மகன் சிபிராஜையும் சினிமாவில் களம் இறக்கினார். சத்யராஜ் அளவிற்கு சிபிராஜ் பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இவரது நடிப்பில் வெளியான படங்களில் சில படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியைப் பெற்றன. மற்றபடி சிபிராஜின் படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தன் தந்தையைப்போல் தமிழ் திரையுலகில் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என எண்ணிய நடிகர் சிபிராஜிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் எப்படியாவது ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வந்தார். ஆனால் அவரது படங்கள் எதுவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

sibiraj-ranga-teaser
sibiraj-ranga-teaser

இனியும் வெள்ளித்திரையை நம்பி பிரயோஜனம் இல்லை என நினைத்த சிபிராஜ் தற்போது சின்னத்திரையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தீரன் சின்னமலை வரலாற்றை மையப்படுத்தி சீரியல் ஒன்று உருவாக உள்ளது. இதில் தீரன் சின்னமலையாக சிபிராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News