வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இதுவரை இணையாத, எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 5 பிரம்மாண்ட கூட்டணிகள்.. அதிலும் அந்த 3வது அணி இணைந்தால் பிளாக்பஸ்டர் உறுதி!

நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இப்படி தனித்துவமிக்க ரசிகர்களாலும் சில கூட்டணிகள் வெகு காலமாக எதிர்பார்ப்பதுண்டு அப்படியான சில கூட்டணிகள்.

ரஜினி, யுவன் கூட்டணி: நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை ஒரு படமும் வெளியாகவில்லை. தலதளபதி என ஆர்ப்பரிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இசையமைத்த யுவன் இன்று வரை தலைவரின் படத்திற்கு இசையமைக்கவில்லையே என்பது அறியாமல் தொற்றும் கேள்வி இருவரின் ரசிகர்களுக்குமே. மூண்று தலைமுறை கடந்த நடிகர் 23 வருட திரைப்பயணம் கடந்த இசையமப்பாளர் என இருவருமே சகாப்தங்களே.

கமல், விவேக் கூட்டணி: ஒரு காலத்தில் டாப் படங்களின் காமெடிகளில் கலக்கி வந்தவர் சின்னக்கலைவானர் விவேக். தலதளபதி தலைவர் படங்களில் நடித்த இவருக்கோ கமலுடன் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லாமலே போனது. ஆண்ட காலம் முதல் ஆயுட்காலம் வரை ஆண்டவரோடு கூட்டணியே இல்லாமல் போனது சின்னக்கலைவானருக்கு. படத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்களையும் திரைக்கதையையும் வடிவமைக்கும் உலக நாயகன் கடைசி வரை சின்னக் கலைவானருக்கு வாய்ப்பு தரவில்லை போலும்.

kamal-vivek
kamal-vivek

தல, சங்கர் கூட்டணி: தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்தின் உச்சங்களை கண்முன் காட்சியிடும் இயக்குனர் ஷங்கர். இவர் தல அஜித்துடன் இணைந்ததே இல்லை தல ரசிகர்கள் பலரும் அடுத்தபடம் ஷங்கருடன் இருக்காதா இருக்காதா என்கிற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தல ரசிகர்களும் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்திருப்பர். இதுவரை எந்த படமும் இயக்குனர் ஷங்கருடன் இணையாத தல விரைவில் இணைவார் என ரசிகரோடு ரசிகராக எதிர்பார்ப்போம்.

தளபதி, வெற்றிமாறன் கூட்டணி: தனுஷ் நடிப்பில் ஆடுகளம் வடசென்னை என சூப்பர் டூப்பர் ஹிட்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன். தளபதி விஜயும் 20 வருடங்களுக்கு மேலாக திரையில் இருப்பவர் இன்றைய காலத்திற்கு தளபதி என ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர். இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்போது வரை எந்த படமும் ரிலீஸாகவில்லை. மாஸ்டர் உட்பட பல்வேற படங்களின் அப்டேட்டுகள் வரும் தருணத்தில் எழுத்து இயக்கம் வெற்றிமாறன் என வராதா என்கிற எதிர்பார்ப்பில் தளபதியின் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

தல, தளபதி கூட்டணி: தல தளபதி என்று ரசிகர்களால் கூறப்படும் நடிகர் அஜித் மற்றும் விஜய் தொடக்கமும் சரி இப்போதைய உச்சமும் சரி என தராசின் முள்ளாய் சரியாக சமமாக நிற்பவர்கள் இவர்கள். ஒவ்வொரு முறையும் ரெக்கார்டை முறியடிப்பது “தல”க்கு தளபதிக்கு தல என்றே இருக்கும். வெளியிடப்படும் படத்தின் போஸ்டராகட்டும் டிரைலராகட்டும் எல்லாவும் ரசிகர்களால் ஒரு நாள் முழுக்க டிரண்டிங் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆரம்பத்தில் சில படங்களை இருவரும் இணைய ஒப்புக்கொண்டாலும் வெளியானது என்னவோ “ராஜாவின் பார்வையிலே” என்கிற ஒற்றை படம் மட்டுமே. இருவருக்கும் பொதுவான ரசிகர்கள் என்பது மிக மிக குறைவே. இருவருக்குள் இருக்கும் நட்பு பெரிதாக பேசப்பட்டாலும் வெளியில் இருக்கும் ரசிகர் கூட்டமோ எலிக்கு பூனைதான். இருவரும் இணைந்து ஒரு படம் வெளியிட்டால் எலியும் பூனையுமாக இருக்கும் ரசிகர்கள் நட்பு பாராட்ட வாய்ப்புகள் வரலாம்.

Trending News