செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அக்கட தேசத்திலும் வேலையை காட்டிய நம்பர் நடிகை.. அடித்து தொரத்தி விட்ட ஹீரோவின் மனைவி

Gossip News: சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி இருந்ததால், அந்த நம்பர் நடிகைக்கு எப்போதுமே முன்னணி ஹீரோயினாக தான் இருக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்தது. அந்த நம்பர் ஒன் இடத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கையில் தான் அந்த நடிகை இருந்தார். இதனால் தான் குறுகிய காலகட்டத்திலேயே அவர் நம்பர் ஒன் நடிகையாக மாறியதற்கு காரணம்.

மாஸ் நடிகர் ஒருவருடன் படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரை மொத்தமாக தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தினார் நம்பர் நடிகை. அந்த நடிகருடன் காதலின் கிசு கிசுக்கப்பட்டதாலே தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளும் வந்தன. இதனாலேயே இந்த வதந்திகளை நம்பர் நடிகை மறுக்காமல் எதுவுமே தெரியாதது போல் காட்டிக் கொண்டார். மாஸ் நடிகரும் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் தொடர்ந்து நம்பர் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார்

ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் கதை மாஸ் நடிகர் இன் மனைவிக்கு தெரிய வந்ததால் மொத்தமாக வாலை சுருட்டி கொண்டார் நம்பர் நடிகை. இனி உள்ளூரில் வேலைக்கு ஆகாதே என அக்கட தேசத்தில் அவருடைய காதல் ஆட்டத்தை ஆரம்பித்தார். அக்கட தேசத்து பெரிய ஹீரோ ஒருவரது படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இங்கேயும் தன்னை நம்பர் ஒன் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த ஹீரோவை வளைத்து போட்டு விட வேண்டும் என முடிவெடுத்தார்.

Also Read:வாய்ப்புக்காக எல்லை மீறி நடிக்கும் சின்னத்திரை நடிகை.. ஹீரோவிடம் நெருக்கம் காட்டி குடும்பத்தை பிரித்த சகுனி

மாஸ் நடிகரைப் போல இந்த சூப்பர் ஹீரோவும் நம்பர் நடிகையின் திட்டம் தெரியாமல் அவருடைய காதல் வலையில் விழுந்தார். நடிகையுடன் அதிகமாக நெருக்கம் காட்டுவது, தாராளமாக ஊர் சுற்றுவது என மொத்தமாக தன்னுடைய போக்கை மாற்றி வந்தார் அந்த சூப்பர் ஹீரோ. அக்கட தேசத்திலும் இந்த நம்பர் நடிகை, சூப்பர் ஹீரோ உடன் நெருங்கி பழகுவதாக வதந்திகள் பரவத் தொடங்கியது.

தொரத்தி விட்ட ஹீரோவின் மனைவி

ஒரு கட்டத்தில் சூப்பர் ஹீரோவின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. இனி உன்னுடன் வாழவே மாட்டேன் என சண்டை போட்டுவிட்டு சூப்பர் ஹீரோவின் மனைவி தனியாக கிளம்பிவிட்டார். நம்பர் நடிகைக்காக மனைவியை பிரிந்து விட்டால் சினிமாவில் மொத்த பெயரும் கெட்டுவிடும் என்ற பயத்தில் சூப்பர் ஹீரோ நேரடியாக மனைவியிடம் சென்று சரணடைந்து இருக்கிறார்.

அந்த சூப்பர் ஹீரோவின் மனைவி உன்னுடன் நான் வரவேண்டும் என்றால் இனிமே அந்த நம்பர் நடிகையுடன் படம் நடிக்கவே கூடாது, எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் அந்த நம்பர் நடிகையை நீ சந்திக்கவே கூடாது என ஏகப்பட்ட நிபந்தனைகளை சொல்லி வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். இதோடு நம்பர் நடிகையின் அக்கட தேசத்து சினிமா பாதையும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

Also Read:குடிபோதையில் டாப் ஹீரோவோட ஜல்சா.. கேரவனில் நடந்த குடித்தனம்! பவுன்சரால் போன மானம்

Trending News