சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பருத்திவீரன் ஹிட்ஆகியும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கல.. அமீருக்கு தோள் கொடுத்த நடிகர்

Kollywood lyricist snehan getting no salary for paruthiveeran movie: வைரமுத்துவின் அசிஸ்டெண்டாக பணிபுரிந்த கவிஞர் சினேகன் அவர்கள் 500 படங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். பல விருதுகளை தனதாக்கி கொண்ட சினேகன் பல வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டு காதல் மனைவியுடன் பயணித்து வருகிறார்.

சினேகன் முதன்முதலாக கே பாலச்சந்தரின் புத்தம் பூவே திரைப்படத்திற்காக எஸ் ஏ ராஜ்குமார் இசையில் பாடல்கள் எழுதினார். தொடர்ந்து  பல படங்களுக்கு பாடல் எழுதி பல விருதுகளையும் வென்று உள்ளார். மேலும் பிக் பாஸ் சோவில் பங்கு எடுத்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

கவிஞராக இருந்தவர் இயக்குனர் அமீருடன் யோகி படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். மேலும் உயர்திரு 420 படத்தில் நடிகராகவும் களமிறங்கினார் சினேகன். சினிமாவுக்கு வாய்ப்பு தேடி ஆரம்ப காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டராம் சினேகன்.

Also read: பவானி ரெட்டியையே சுற்றி சுற்றிவரும் சினேக் பாபு.. பாத்ரூமில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த அடுத்த சினேகன்

இயக்குனர் அமீர் மற்றும் சினேகனின் நட்பு பலமானது. அமீர் தனது முதல் படமான மௌனம் பேசியதேயில் பாடல்களை எழுத சினேகனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அது பருத்திவீரனிலும் தொடர்ந்தது. பருத்திவீரன் படத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையே இயக்கிய அமீரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்காமல் அனைத்து பாடல்களையும் எழுதிக் கொடுத்தார் சினேகன்.

அமீரிடம் நட்பு பாராட்டி இன்று வரை அப்படத்திற்கு சம்பளமே வாங்கவில்லையாம். அமீரிடம் என்னால் உங்களுக்கு பணம் கொடுத்து உதவ முடியாது உங்களுக்காக என்னால் இது மட்டும் தான் முடியும் என்று ஊதியமின்றி பாடல் எழுதி தோள் கொடுத்தாராம் இந்தத் தோழர்.

பருத்திவீரன் பட விவகாரத்திலும் அமீருக்கு ஆதரவாக “ஒருவரை விமர்சிக்க அறம் தெரிந்து இருக்க வேண்டும் என்று புறம் பேசியவர்களை புறந்தள்ளினார் சினேகன். அமீரின் நேர்மையை எடைபோட்டுப் பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ஒரு காட்டு காட்டியிருந்தார். பணத்தைக் கொண்டு எதையும் வாங்கும் இந்த உலகில்  நண்பனுக்காக பணத்தை ஒரு பொருட்டாக கருதாமல் கைமாறு செய்தது பாராட்டுக்குரியது.

Also read: இவ்வளவு சண்டையிலும் நன்றி சொல்ல ஒரு மனசு வேணும் சார்.. சூர்யாவை புல்லரிக்க வைத்த அமீர்

Trending News