இந்திய சினிமா துறையில் ஒவ்வொரு நடிகை, நடிகர்களுக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கின்றன. இருப்பினும் சிலரின் திறமைகள் விருதுகள் பெற்று அங்கீகாரம் பெறுகின்றது பலரின் திறமைக்கு விருதுகள் கிடைப்பதில்லை அவ்வாறு தேசிய விருதுகளை பெற அல்லது அங்கீகரிக்கப்படாத சிலரின் இப்போது பார்ப்போம்.
விக்ரம்: நடிகர் விக்ரமின் நடிப்பை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு வேடங்களில் சிறப்பாக நடிப்பவர். இவருடைய நடிப்பு ரசிகர்களின் அடி மனதில் பதியும் அளவிற்கு நடிப்பில் அசத்துவார் பன்முகம் கொண்ட விக்ரமின் அந்நியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து திரைப்படத்தில் தேசிய விருதினை பெறும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது, எனினும் தேசிய விருதை பெறவில்லை.
சூர்யா: சாக்லேட் பாயாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. பெண்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரின் “வாரணமாயிரம்” மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இரட்டை வேடங்களில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் தேசிய விருதினைப் பெற்றது. இருப்பினும் சூர்யாவின் நடிப்பிற்கு விருது கிடைக்கவில்லை.
அஜித்: தல அஜித் பெரும்பாலும் காதல் திரைப்படங்களிலேயே ஆரம்பகாலத்தில் நடித்தார் .”வரலாறு” என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் விமர்சையாக பேசப்பட்டது. இந்த திரைப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் நடிப்புக்கு கிடைக்கவில்லை.
ஜோதிகா: சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தேசிய விருது பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் சந்திரமுகி திரைப்படத்தில் தனது குரல் இல்லாமல் டப்பிங் வைத்து பேசியதால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது.
சிம்ரன்: இளைஞர்களின் இதயத்தை கொள்ளை அடித்த இடுப்பழகி சிம்ரனின் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம் .”கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். இவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர் ஆனால் கிடைக்கவில்லை.