புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அனைவரையும் வாழவைக்கும் சினிமா, என்னை மட்டும் எதிர்த்தது.. உண்மையை சொன்ன கமல்

உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரம் இந்த படத்திற்கான சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

கமலஹாசன் சினிமா உலகில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் உதவி இயக்குனர், உதவி நடன இயக்குனர், நடன இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை முதலில் கொண்டு வந்தவர் இவர் தான்.

Also Read: கமல், விக்ரமிற்கு டஃப் கொடுக்கும் சூர்யா.. ஒரே படத்தில் இத்தனை கெட்டப்புகளா?

கொரோனா லாக்டவுன் காலத்தில் உலக அளவில் சினிமாதுறை முடங்கி போனது என்றே சொல்லலாம். பட சூட்டிங்குகள் பாதியிலேயே நின்று விட்டன. சூட்டிங் முடிக்கப்பட்ட படங்கள் ப்ரொடக்சன் வேலைகள் செய்ய முடியாமலும், ப்ரொடக்சன் வேலைகள் முடிந்த நிலையில் திரையில் ரிலீஸ் செய்ய முடியாமலும் மொத்த சினிமா உலகமே ஸ்தம்பித்து போனது.

அப்போது தான் OTT தளங்கள் தங்களுக்கென்று ஒரு நிலையான அடையாளத்தை தென்னிந்திய சினிமாவில் நிறுவின. ரிலீசுக்கு ரெடியாக இருந்த நிறைய படங்கள் OTT தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. தமிழில் முதன்முதலில் OTT யில் வெளியான படம் என்றால் அது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்கள் இப்படி ரிலீஸ் ஆக ஆரம்பித்தன.

Also Read: பிக் பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 300 எபிசோடுகளிலேயே மூட்டை கட்டிய இயக்குனர்

இந்த டெக்னாலஜியை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கமலஹாசன் கொண்டு வர முயன்றார். தான் தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்தை DTH ல் ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்தார். ஆனால் அப்போது தியேட்டர் உரிமையாளர்கள் கமலை பயங்கரமாக எதிர்த்தனர். கமல் DTHல் ரிலீஸ் செய்தால் இனி அவர் படங்களை தியேட்டர் ரிலீஸ் செய்ய மாட்டோம் என முடிவெடுத்தனர்.

இதை பற்றி சமீபத்தில் விக்ரம் பட நூறாவது நாள் விழாவில் பேசிய கமல் நான் OTT ஐ கொண்டு வர முயன்ற போது பயங்கரமாக எதிர்த்தார்கள். இப்போது OTT க்கு ஆதரவு பெருகி விட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை போல சினிமாவும் அனைவரையும் வாழ வைக்கும் என்று கூறியிருக்கிறார்.

Also Read: 5 வருடத்திற்கு பின் கமல் தூசி தட்டும் படம்.. உற்சாகத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்த நிறுவனம்

 

Trending News