செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

2014ல நடந்தது 2024ல ரிப்பீட்டு.. டாப் 5 ஹீரோக்களின் 10 வருட சேலஞ்ச், தனுசுக்கு அடித்த லக்

Dhanush: இப்போது சோஷியல் மீடியாக்களில் பத்து வருட சேலஞ்ச் என்பது பிரபலம் ஆகிவிட்டது. அதேபோல் கோலிவுட் டாப் 5 ஹீரோக்களுக்கு 2014ல் நடந்த சம்பவங்கள் அப்படியே பத்து வருடம் கழித்து 2024ல் ரிப்பீட் ஆகியுள்ளது. அதைப்பற்றி காண்போம்.

ரஜினி: 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. ஒன்று இவருடைய மகள் இயக்கிய படம் தான் கோச்சடையான். பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் படுதோல்வி அடைந்தது.

அதை அடுத்து கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் இவர் நடித்த படம் தான் லிங்கா. அது கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதில் சூப்பர் ஸ்டாரின் பெர்ஃபாமன்ஸ், சண்டை காட்சிகள், கிளைமாக்ஸ் நீளம் போன்றவை அடங்கும்.

அதேபோல் 2024ம் ஆண்டில் இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் கலவையான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்: 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் இவர் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு கேரக்டர் பெயர் ஜீவானந்தம். அதேபோல் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த கோட் படத்திலும் இவர் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு கேரக்டரின் பெயர் ஜீவா.

5 ஹீரோக்களின் 10 வருட சேலஞ்ச்

தனுஷ்: 2014ஆம் ஆண்டு இவருடைய 25வது படமான வேலையில்லா பட்டதாரி வெளியானது. ரகுவரன் என்ற கேரக்டரில் நடித்திருந்த தனுஷுக்கு இப்படம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. அதேபோல் 2024ம் ஆண்டில் இவர் இயக்கி நடித்த ராயன் இவருடைய 50வது படமாகும். அப்படமும் வசூல் ரீதியாக வெற்றி தான்.

சிவகார்த்திகேயன்: 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் மான் கராத்தே வெளியாகி இவருக்கான அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் ஏ ஆர் முருகதாஸின் அசோசியேட் டைரக்டர் ஆவார்.

அதேபோல் 2024 ஆம் ஆண்டு வெளியான அமரன் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி ஏ ஆர் முருகதாசிடம் அசோசியேட் டைரக்டராக இருந்தவர் தான்.

சூர்யா: இவருக்கு 2014 ஆம் ஆண்டு அஞ்சான் படம் வெளியானது. இப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் பாக்ஸ் ஆபிஸை பொருத்தவரையில் தோல்விதான்.

அதேபோல் தற்போது 2024 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கங்குவா நேற்று வெளியானது. ஆனால் படத்திற்கு தற்போது நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இந்த ஐந்து ஹீரோக்களுக்கும் பத்து வருட சேலஞ்ச் ரிப்பீட் மோடில் இருக்கிறது. அதில் தனுசுக்கு ஸ்பெஷல் சம்பவமாக இருக்கிறது.

Trending News