திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன கொழுந்தனார்.. வைரலாகும் பதிவு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இவருடைய கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அண்மையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று சமந்தாவின் பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Also Read :வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. அவரே வெளியிட்ட பதிவால் அதிர்ச்சியில் திரையுலகம்

அதாவது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் இதிலிருந்து சீக்கிரம் குணம்பெற்று வீடு திரும்புவேன் என்று நம்புவதாகவும் சமந்தா கூறி இருந்தார். இதனால் பலரும் தற்போது சமந்தா விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்து வருவதாக கூறினார்கள்.

இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி சமந்தாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். அதே வலிமை உடன் மீண்டும் வர வேண்டும் என சமந்தாவிற்கு அகில் பதிவு போட்டுள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read :நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்

ஏனென்றால் நாக சைதன்யாவே சமந்தாவிற்கு எந்த ஆறுதலும் கூறாத நிலையில் தற்போது அவரது சகோதரர் கூறியுள்ளார். சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு எங்களுக்குள் சுமுகமான உறவு இருப்பதாக நாகார்ஜூன் கூறியிருந்தார்.

ஆனால் அவர்கள் குடும்பத்தில் இருந்து அகில் மட்டும்தான் தற்போது சமந்தாவுக்கு ஆறுதலாக பதிவு போட்டுள்ளார். மேலும் விரைவில் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

samantha

Also Read :புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

Trending News