வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் கோவை சரளா.. அந்த கேரக்டர் செலக்ட் பண்ணதுதான் மாஸ்

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கோவை சரளா. நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இவர் தமிழில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சூரி உட்பட அனைத்து நடிகர்களுடனும் காமெடியில் கலக்கி உள்ளார். இன்றும் கூட இவருடைய நடிப்பிற்கு ஈடாக எவரும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து கேரக்டர்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார்.

தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அந்தத் திரைப்படத்தில் 65 வயது பாட்டி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்கிறார். தன்னுடைய பேத்திக்கு ஏற்படும் அநீதியைத் தட்டிக் கேட்கும் தைரியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவர் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுடன் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா, கமல்ஹாசனுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் அனைத்தும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது.

அதை தொடர்ந்து இவர் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அனைத்து தலைமுறை நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்த இவர் சமீப காலமாக வலுவான கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திகில் திரைப்படத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடிக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Trending News