சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தன்னை மீறி பாராட்டு வாங்கிய கோவை சரளாவை வச்சு செய்த நடிகர்.. விரக்தியில் பட வாய்ப்பை இழந்த கொடுமை

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவின் நடிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால் அந்த காலத்தில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு இணையாக இவருக்கென்று மிகப்பெரிய இடத்தை ரசிகர்கள் கொடுத்திருந்தனர். இவர் காலத்திற்குப் பிறகு மனோரமா இடத்திற்கு வேறு யாராலையும் வர முடியாது என்று இருந்த நிலையில் இவரையே மறக்கும் படி நகைச்சுவை உணர்வால் பேசி தன் பக்கம் கவனத்தை திருப்பியவர் தான் கோவை சரளா.

80, 90களில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து விளங்கிய கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் இவர்களுடன் எந்த விதத்திலும் குறைஞ்சது இல்லை என்று நகைச்சுவை நடிகையாக இருந்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அதிலும் இந்த நடிகர்களுடன் எந்த காம்பினேஷனில் நடித்தாலும் அந்த படம் மற்றும் காமெடி மிகப்பெரிய ஹிட் ஆகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை ஏற்படுத்தியிருக்கும்.

Also read: காடுகளை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 6 படங்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய கோவை சரளா

முக்கியமாக கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் கவுண்டமணியை கலாய்க்கும் காட்சியை பார்க்கும் பொழுது இப்படி எல்லாம் ஒரு நடிகை இறங்கி நடிக்க முடியுமா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும். அடுத்ததாக வடிவேல் உடன் சேர்ந்து ஒருவரை ஒருவர் ஒவ்வொரு படங்களிலும் மாத்தி மாத்தி கலாய்த்து அடிதடியில் இறங்கி காமெடியாக நடித்திருப்பார்கள்.

ஆனால் இங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகி இருக்கிறது. அதாவது இயக்குனர்கள் பலரும் இவர்கள் இருவரையும் வைத்து காட்சியை எடுத்ததில் அதிக வரவேற்பை ஏற்படுத்தியது கோவை சரளா வடிவேலுவை அடிக்கிற காட்சிகள் தான். அதற்காகவே எல்லா இயக்குனர்களும் தொடர்ந்து வந்த படங்களில் கோவை சரளா, வடிவேலுவை வெளுத்து வாங்கும் காட்சியை அதிகப்படுத்தினார்கள்.

Also read: பவர்ஃபுல் கதாநாயகிகளுக்காக தாறுமாறாக ஓடிய 5 படங்கள்.. செம்பியில் மிரட்டிய கோவை சரளா

அத்துடன் வடிவேலுவைவிட கோவை சரளாக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டி புகழ்ந்திருக்கிறார்கள். இதை பார்த்த வடிவேலு தன்னைவிட பாராட்டு கோவை சரளா வாங்குவதை பொறுக்க முடியாமல் இயக்குனர்களிடம் இனிவரும் படங்களில் நான் மட்டுமே காமெடி பண்ணுகிறேன். கோவை சரளாவை என்னுடன் வைத்து எந்த படமும் எடுக்க வேண்டாம் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.

அதையும் மீறி கோவை சரளா தான் வேண்டுமென்றால் நான் உங்க படத்தில் காமெடி செய்ய மாட்டேன் என்று இயக்குனர்களை வடிவேலு பிளாக்மெயில் செய்து இருக்கிறார். இதனால் இயக்குனர்களும் வடிவேல் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் கோவை சரளாவை யாருமே கூப்பிடவில்லை. இதனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு கட்டத்தில் கோவை சரளா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது வரை கோவை சரளா இடத்திற்கு யாராலையும் வர முடியவில்லை.

Also read: வாரிசு பட கோவை சரளாவுக்கு இத்தனை கோடியா.. நயன்தாராவை ஓவர்டேக் செஞ்சிட்டாங்க போல

Trending News